டிடிவி தினகரனை ஓரங்கட்டினால் சசிகலாவுடன் இணைந்து போக எடப்பாடி தயார்! ரகசிய டீலிங்!

டிடிவி தினகரனை ஓரங்கட்டினால் சசிகலாவுடன் இணைந்து போக எடப்பாடி தயார்! ரகசிய டீலிங்!

Views : 2271

பெங்களூர் சிறையிலிருந்து வெளியே வந்து எட்டு மாதங்களான நிலையில் திடீரென தற்போது ஜெயலலிதா நினைவிடத்துக்கும், எம்ஜிஆர் நினைவு இல்லத்துக்கும் சென்று வந்துள்ளார். அதிமுகவின் கொடியை ஏற்றி பொதுச் செயலாளர் என்று தனது பெயர் போட்ட கல்வெட்டையும் அமைத்திருக்கிறார். மிக முக்கியமாக தற்போதைய அதிமுக தலைமையுடன் இணக்கமாக செல்லத் தயார் என வெளிப்படையாக வெள்ளைக் கொடி காட்ட உள்ளார்.

ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் டெல்லியுடன் நெருக்கம் காட்டி அந்த நம்பிக்கையிலேயே சசிகலாவை எதிர்த்து வருகின்றனர். டெல்லி சென்றாலோ, டெல்லி சென்று திரும்பினாலோ சசிகலாவுக்கு எதிராக பேசுவதை இருவரும் வாடிக்கையாக வைத்துள்ளனர். டெல்லியும் சசிகலாவுக்கு பல்வேறு குடைச்சல்களை கொடுத்து வருகிறது. அவரது சொத்துக்கள் ஒன்றன்பின் ஒன்றாக முடக்கப்பட்டு வருகின்றன.

ஆனபோதும் கட்சியில் இணைவதில் உறுதியாக இருக்கிறாராம். எனவே சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான அவரது சமூகத்தைச் சேர்ந்த அதே சமயம் கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக கால் ஊண்ற காரணமாக இருந்த ஒருவர் மூலம் சமரச பேச்சுவார்த்தையை சசிகலா நடத்தி வந்ததாக சொல்கிறார்கள். எடப்பாடி தரப்பிடம் அவர் தான் தொடர்ச்சியாக பேசிவருவதாகவும் கூறுகிறார்கள்.

இந்த பேச்சுவார்த்தையில் சசிகலா சில சமரசங்களுக்கும் சம்மதித்துள்ளதாக கூறுகின்றனர். சசிகலாவை உள்ளே விட்டால் மன்னார்குடி குடும்பமே உள்ளே நுழைந்து நமது தலைமேல் அமர்ந்துகொள்ளும் என எடப்பாடி மட்டுமல்லாமல் பன்னீர் செல்வமும் நினைப்பதாக அப்போதே தகவல் வெளியானது. தற்போது சசிகலா தான் மட்டுமே கட்சிக்குள் வருவதாக தெரிவித்துள்ளாராம். அதனாலே சனி, ஞாயிற்றுக் கிழமை சசிகலா முன்னெடுத்த முக்கிய நிகழ்வுகளில் டிடிவி தினகரனையும் அனுமதிக்கவில்லை என்கிறார்கள்.

சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா உடனடியாக தேர்தலில் போட்டியிடவும் முடியாது. அதை எடப்பாடி பழனிசாமி தனக்கு சாதகமாக பார்ப்பார் என்கிறார்கள். பொதுச் செயலாளர் பதவி மட்டும் போதும் என்பதில் சசிகலா உறுதியாக இருக்கிறார். அதிமுகவைப் பொறுத்தவரை மிக பலமான பதவி அதுதான். அனைத்து அதிகாரங்களும் அந்த பதவிக்கு தான் உள்ளது. அனைத்து அதிகாரங்களையும் அவரிடம் கொடுத்துவிட்டு நிற்கவும் ஓபிஎஸ், இபிஎஸ் தயாராக இல்லையாம். எனவே அந்தப் பதவியின் அதிகாரங்களை குறைக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

திரைமறைவில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளும், தூது படலமும் சரியாக சென்றால் மேற்சொன்ன பாதையில் சசிகலாவும், எடப்பாடியும் செல்வார்கள் என்று உறுதியாக சொல்கிறார்கள் இரு பக்க நகர்வுகளையும் அறிந்தவர்கள்.


JOIN IN TELEGRAM

நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ.1 லட்சம்: பாமக மாவட்ட செயலாளர்!

Nov 14, 2021 - 1 week ago
நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ.1 லட்சம்: பாமக மாவட்ட செயலாளர்! நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்துக்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறையில் சூர்யா நடித்த வேல் திரைப்படம் திரையிடப்பட்டதை அறிந்து அங்கு சென்று பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெய்பீம் திரைப்படத்திற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்சம் ரூபாய் பரிசு

சூர்யா, ஜோதிகாவைக் கைது செய்யவேண்டும் - காவல்துறையில் பா.ம.க புகார்!

Nov 19, 2021 - 1 week ago
சூர்யா, ஜோதிகாவைக் கைது செய்யவேண்டும் - காவல்துறையில் பா.ம.க புகார்! நடிகர் சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் ஜெய்பீம் திரைப்படம் சமீபத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. காவல்துறை வன்முறையால் கொல்லப்பட்ட பழங்குடி நபர் ராஜாக்கண்ணுவின் உண்மைக் கதையைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்துக்கு அனைத்து தரப்பிலிருந்தும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. விமர்சன அளவில் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதற்கிடையில்,

நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

Nov 16, 2021 - 1 week ago
நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு! நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி, ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. இந்தப் படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜெய்பீம் திரைப்படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினை தவறாக சித்தரிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சிலரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. படத்தில் இடம்பெற்ற காலண்டர் மாற்றப்பட்ட பிறகும் எதிர்ப்பு தொடர்கிறது. இதனிடையே, ஜெய்பீம் படம்