பிரதமர் நரேந்திர மோடிக்கு சொந்தமா கார் கூட கிடையாதாம்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு சொந்தமா கார் கூட கிடையாதாம்!

Views : 147

பிரதமர் நரேந்திர மோடியின் அசையும், அசையா சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட ரூ.26 லட்சம் அதிகரித்து, ரூ.2.23 கோடியாக உயர்ந்துள்ளது என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியிடம் அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை என்றும் அசையும் சொத்துக்கள் மட்டுமே இருப்பதாகவும், அதிலும் பெரும்பகுதி வங்கி டெபாசிட், அஞ்சலக சேமிப்பு, காப்பீடுகள் மட்டுமே உள்ளன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

பிரதமருக்கு சொந்தமாக கார்கள் எதுவும் இல்லை. அதேவேளையில், பிரதமர் மோடி சொந்தமாக 1.73 லட்சம் மதிப்பு கொண்ட 4 தங்க மோதிரங்கள் வைத்துள்ளார். காந்தி நகரில் பிரதமர் மோடிக்குச் சொந்தமாக இருந்த அவரின் பங்கு நிலத்தையும் தானமாக வழங்கிவிட்டார். பிரதமர் மோடி தன்னிடம் ரொக்கமாக 35,250 ரூபாய் மட்டுமே வைத்திருக்கிறார்.

நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக 12 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். அதேபோல், தற்போது இரண்டாவது முறையும் சேர்த்து மொத்தம் 8 ஆண்டுகள் அவர் பிரதமராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


JOIN IN TELEGRAM

ஒரு கழிவறைக்குள் இருவர்.. அது எப்படி முடியும்..! முகம் சுழிக்கும் கோவை மக்கள்..!

Sep 07, 2022 - 3 weeks ago
ஒரு கழிவறைக்குள் இருவர்.. அது எப்படி முடியும்..!  முகம் சுழிக்கும் கோவை மக்கள்..! அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக கட்டப்பட்டுள்ள சமுதாய கழிவறை வளாகத்தில் , ஓரே அறையினை இருவர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கபட்டு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சமுதாயக் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிவறைகளில் , ஓரே

அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி!

Sep 27, 2022 - 2 days ago
அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி! சென்னையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு திடீர் உடலநலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு லேசான

அமைச்சர் சேகர் பாபுவின் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை!

Sep 27, 2022 - 2 days ago
அமைச்சர் சேகர் பாபுவின் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை! இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் உடன் பிறந்த சகோதரரான பி.கே.தேவராஜ், சென்னை ஓட்டேரியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது 2 மகன்களும் பட்டப்படிப்பை முடித்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு 11 மணியளவில் அவர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஓட்டேரி காவல்