கொரோனா 3வது அலைக்கான விழிப்புணர்வுப் பதிவு!

கொரோனா 3வது அலைக்கான விழிப்புணர்வுப் பதிவு!

Views : 1758

கொரோனா 3வது அலை, குழந்தைகளைப் பாதிக்கும் என்று சொல்கிறார்கள். தமிழ்நாடு அரசும் களத்தில் சித்தமருத்துவத்துடன் தயாராக இருப்பதாக முன்னறிவித்திருக்கிறது. சித்தமருத்துவத்தில் குழந்தைகளுக்கு முன்னெச்சரிக்கையாகத் தரப்படுவது உரைமாத்திரை. ஒரு மாத வயது குழந்தையிலிருந்து மூன்று வயது வரையிலும் இந்த மருந்தினை எடுத்துக்கொள்வதால் சளி, காய்ச்சலிலிருந்து விடுதலைபெறலாம், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாகும். சுவாச உறுப்புகளின் பாதிப்புகள் குணமாகும், புதிய தொற்று ஏற்படாமலும் பாதுகாக்கும்.

இது பற்றிய ஆய்வறிக்கைகள் எல்லாம் வேண்டும், இருந்தால் தான் ஏற்றுக்கொள்வேன் என்று சொல்பவர்களுக்கு உரைமாத்திரை பற்றிய ஆய்வறிக்கையும் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இந்த உரைமாத்திரை, தமிழ்ப்பண்பாட்டுடன் பன்னெடுங்காலமாகப் பின்னிப் பிணைந்த ஒரு மருத்துவ அறிவு. இன்றும் கிராமங்களில் பிறந்த குழந்தைகளைப் பார்க்கப்போகும் தாய்மாமன் கொண்டு செல்லும் சீர்வரிசைகளில் இந்த உரைமாத்திரையும் அதில் சேரும் மருந்துப்பொருட்களும் அவசியம் இருக்கும். தமிழ்த்திணைச்சூழலில் வளரும் ஒவ்வொரு குழந்தைக்கும் இதுவே தாய்ப்பாலுக்கு அடுத்த முதன்மையான மருந்தாகிறது. ஒட்டுமொத்தத் தமிழ்ச்சமூகமும் இந்த உரைமருந்தையும் அதன் மருத்துவப்பொருட்களையும் கடந்து தான் வளர்ந்தெழுந்து நிற்கிறது என்று ஆணித்தரமாகச் சொல்லலாம்.

மானுடவியல் ஆய்வின் அடிப்படையிலும், நவீன மருத்துவ ஆய்வின் அடிப்படையிலும் இந்தத் தனித்துவமான மருந்தினைப் புரிந்துகொள்ளும் அவசியம் இன்று நம்மிடையே இருக்கிறது. இது மட்டுமன்றி, நவீனக்கொள்ளை நோயில் இம்மருந்தின் செயல்பாட்டினை நாம் உணர்ந்துகொள்ளவும் முக்கியமான தருணம், இது.

குழந்தைகளுக்குத் தேன் அல்லது பாலில் உரைத்துக் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: மாந்தம், கணம், சளி, இருமல், நாட்பட்ட சளி, நாட்பட்ட இருமல், தொடர் சுரம் ஆகியவற்றின் போது உடல் வன்மையை அதிகரித்து தொற்றுநோயைத் தடுக்கும்.

கிடைக்கும் அளவு:
100 மி.கிராம் மாத்திரை - 5 X 20 Blister,100 மாத்திரைகள், 500 மாத்திரைகள்
500 மி.கிராம் மாத்திரை - 100 மாத்திரைகள், 500 மாத்திரைகள்

ஆதாரம்:
The Siddha formulary of India - பாகம் 1

சேரும் மருந்துப்பொருட்களும் அளவுகளும்
சுக்கு, அதிமதுரம், அக்ரகாரம், வசம்பு, சாதிக்காய், மாசிக்காய், கடுக்காய்த்தோல், பெருங்காயம், பூண்டு, திப்பிலி, வேலம்பிசின் - வகைக்கு 100 கிராம், துளசி கசாயம், வேப்பங்கொளுந்து கசாயம் வகைக்கு 1,200 லிட்டர்.

அளவும் துணைமருந்தும்
1 முதல் 2 மாத்திரை பால் அல்லது வெந்நீருடன் தினமும் இரண்டு வேளைகள் உணவிற்குப் பின் கொடுக்கவும் (அ) மருத்துவரின் அறிவுரைப்படி (பெரியவர் 500 மி.கி. அளவு மாத்திரை)
(சிறியவர் 100 மி.கி. அளவு மாத்திரை)

The Multi-faceted role of Urai Mathirai – The Immune pill of Siddha - This was published in the 'Asian Journal of Pharmaceutical and Clinical Research'.

https://www.researchgate.net/publication/314238918_The_Multi-faceted_role_of_Urai_Mathirai_-_The_Immune_pill_of_Siddha

நன்றி: சித்தமருத்துவர்களின் பேரமை

நன்றி S R Deva Raj இரா. மதிவாணன்

Tags

JOIN IN TELEGRAM

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன்.! அதிமுகவில் இணைந்த 15 நாட்களில் நெல்லை வேட்பாளர்!

Mar 21, 2024 - 3 weeks ago
ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன்.! அதிமுகவில் இணைந்த 15 நாட்களில் நெல்லை வேட்பாளர்! நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதி வேட்பாளாராக சிம்லா முத்து சோழன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 15நாட்களுக்கு15நாட்களுக்கு முன்பாக திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அதிமுக, திமுக அறிவித்துள்ளது. இதில் 18 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடியாக களம் இறங்குகிறது. இதில்

நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன்

Apr 03, 2024 - 1 week ago
நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன் “ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது” என்று அமமுக பொதுச்செயலாளரும் , தேனி பாராளுமன்ற அமமுக வேட்பாளருமாகிய டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசினார்.

“3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது - அமலாக்கத்துறை அதிரடி

Mar 21, 2024 - 3 weeks ago
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது -  அமலாக்கத்துறை அதிரடி மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில்