வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை - ஒரு சவரன் 52 ஆயிரம் !

Apr 03, 2024 - 1 month ago

வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை - ஒரு சவரன் 52 ஆயிரம் ! சென்னை,தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்து வரலாறு காணாத அளவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.52 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.


கனிமொழி எம்.பி. சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 80 சதவீதம் உயர்வு, ரூ.57.32 கோடிக்கு சொத்து:

Mar 27, 2024 - 1 month ago

கனிமொழி எம்.பி. சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 80 சதவீதம் உயர்வு, ரூ.57.32 கோடிக்கு சொத்து: தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.பி.யும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான கனிமொழி 2-வது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். இதனையொட்டி நேற்று அவர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான லட்சுமிபதியிடம் மனுத்தாக்கல் செய்தார். அவர் தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ரூ.1 கோடியே 37 லட்சத்து 16 ஆயிரத்து


பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட வாகனத்தில் 180 கிலோ தங்கம், 250 கிலோ வெள்ளி பொருட்கள்

Mar 26, 2024 - 1 month ago

பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட வாகனத்தில் 180 கிலோ தங்கம், 250 கிலோ வெள்ளி பொருட்கள் பாராளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெற உள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்ட நிலையில் தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது.அதன் அடிப்படையில் தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட எல்லையில் பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்


நாடு முழுவதும் 3 ஆண்டுகளில் 9 ஆயிரம் கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

Mar 15, 2023 - 1 year ago

நாடு முழுவதும் 3 ஆண்டுகளில் 9 ஆயிரம் கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் புதுடெல்லி : அங்கத்தை அழகு செய்யும் தங்கத்தின் விலை நாளுக்குநாள் அசுர வேகத்தில் உயர்ந்துகொண்டே இருக்கிறது.இருப்பினும் மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அதன் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை.தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது ஒரு புறம் இருக்க தங்கம் இல்லாமல் வணிகம் இல்லை என்கிற நிலையிலேயே உலகப்பொருளாதாரம் உள்ளது.பண்டைய காலத்தில் இருந்தே