Thursday, June 24
Shadow

அதிமுக அமமுக கூட்டணி! அமமுக விற்கு 40 சீட்!

அதிமுக-அமமுகவை இணைக்கும் முயற்சியில் (அதிமுக அமமுக கூட்டணி) பாஜக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே டிடிவி தினகரன் சில தொழிலதிபர்கள் மூலம் பாஜக மேலிடத்தில் தொடர்பு கொண்டு அமமுகவையும், அதிமுகவையும் இணைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அப்போது சசிகலாவுக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுத்தால் கட்சியை இணைப்பதாகும், பாஜக செல்வதை கேட்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

அதிமுக அமமுக கூட்டணி

இதற்கு சில பாஜக தலைவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அதிமுக கைபற்ற டிடிவி தினகரன் திட்டம் போட்டு வருகிறார். அதன்படி, எடப்பாடி பழனிசாமி உடன் தனது ஆதரவாளர்கள் சிலர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் சசிகலா. அப்போது, தனது ஆதரவாளர்களுக்கு 40 சீட்டு கொடுத்தால் போதும், கட்சியை இணைத்துவிடுகிறேன். மோதலில் ஈடுபட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என தெரிவித்துள்ளாராம்.

அதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கவில்லை. சசிகலாவிடம் கட்சியை கொடுத்தால் அது சாதிக் கட்சியாக மாறி விடும். அமமுகவும் தற்போது ஒரு சாதி சங்கமாக தான் உள்ளது. தென்மாவட்டங்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே வாக்களிக்க கூடிய கட்சியாக தான் உள்ளது. இதனால், கட்சியை எந்த காரணம் கொண்டும் சசிகலாவிடம் கொடுக்க முடியாது. 40 சீட் தர முடியாது என்று எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், அமித்ஷாவிடம் சில முக்கிய புள்ளிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சசிகலா, 40 சீட்டு கொடுத்தால் போதும், அதிமுகவுடன் இணைக்கக் கூட வேண்டாம். கூட்டணி வைத்தால் போதும் என இறங்கி வந்துள்ளார்.