Sunday, April 11
Shadow

அமமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தது. விரைவில் வேட்புமனுத்தாக்கல் தொடங்கவிருக்கும் நிலையில் தற்போது கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இன்று அ.தி.மு.க, திமு.க, தே.மு.தி.க , மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

இந்த சூழலில் இன்று காலை அமமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதனை கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருக்கிறார்.