Friday, June 18
Shadow

பாமக தொகுதிகளை கேட்கும் பாஜக! அதிமுக தொகுதிகளை கேட்கும் பாமக!

அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட விரும்பும் 23 பாமக தொகுதி கள் அடங்கிய உத்தேச பட்டியல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கலாம் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு ஆகியோர் சென்னை எம்ஆர்சி நகரிலுள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு வந்தனர்.

பாமக தொகுதி

பாமக போட்டியிட விரும்பும் 23 தொகுதிகள் அடங்கிய உத்தேச பட்டியலும் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கும்மிடிப்பூண்டி, திருத்தணி, வேளச்சேரி,செங்கல்பட்டு, திருப்போரூர், சோளிங்கர் ஆர்க்காடு, ஓசூர், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், ஆரணி, க,லசப்பாக்கம், அணைக்கட்டு, திண்டிவனம், விக்கிரவாண்டி,சங்கராபுரம், மேட்டூர், வீரபாண்டி, குன்னம், ஜெயக்கொண்டம்,பண்ருட்டி, நெய்வேலி, காட்டு மன்னார்கோயில் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

பாமக கோரும் சட்டமன்ற தொகுதிகளில் சில தற்போது அதிமுக வசம் உள்ளன. இதே போல் பாமக விரும்பும் தொகுதிகள் சிலவற்றை பாஜகவும் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே இது குறித்து அதிமுக, பாமக பிரதிநிதிகள் ஆலோசனை மேற்கொண்டனர். ஆனால் பாமகவுக்கு இன்னும் தொகுதிகள் இறுதி செய்யப்படவில்லை.