திமுக, மக்கள் நீதி மையம் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தரப்பில் தோழமை கட்சிகளுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது இந்த சூழலில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசனை இருவேறு இடங்களில் வைத்து சந்தித்து பேசியதாகவும் தொகுதி பங்கீடு பேச்சு நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் திமுக தரப்பிலும் உதயநிதி ஸ்டாலின் தரப்பிலும் இந்த தகவல்கள் உண்மை என தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் திமுகவும் கமலும் தற்போது பழகினமாகிவிட்டதால் ஒன்றாக சேர்ந்து அதிமுக உடன் மோத நினைப்பதாக கூறினார்.
Coalition talks between DMK and Makkal Needhi Mayyam
கூட்டணி பேச்சுவார்த்தை

Source : twitter