Friday, June 18
Shadow

அமமுக கூட்டணியில் தேமுதிக!

அதிமுக தேமுதிக மூன்றாவது கட்டப் பேச்சுவார்த்தையில் தொகுதி எண்ணிக்கையில் கிட்டதட்ட இறுதி நிலைக்கு வந்துள்ளது. ஆனால் குறிப்பாக 13 முதல் 15 தொகுதிகளை கொடுக்க அ.தி.மு.க தரப்பு சம்பதம் தெரிவித்தது. இதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தே.மு.தி.க-வும் வந்தது. அதோடு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் தே.மு.தி.க-வுக்கு ஒரு இடமும் வழங்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால், கரன்சி விசயத்தில் அ.தி.மு.க தரப்பு காட்டிய கறார்தான் தே.மு.தி.க-வின் உச்சக்கட்ட கோபத்திற்குக் காரணம் என்கிறார்கள். தேர்தலில் தே.மு.தி.க வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை அ.தி.மு.க தரப்பு ஏற்றுக்கொள்வதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அந்தத் தொகையை அ.தி.மு.க தரப்பே நேரடியாக கையாளும் என்றும், தே.மு.தி.க வேட்பாளர்களிடம் ஒப்படைக்க முடியாது என்றும் சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு தே.மு.தி.க தரப்பு ஒப்புக்கொள்ளவில்லை. சீட்டு முக்கியமா நோட்டு முக்கியமா என்கிற நெருக்கடியை அ.தி.மு.க தரப்பு தே.மு.தி.க-வுக்கு ஏற்படுத்தியது.

அமமுக கூட்டணி

அமமுக கூட்டணி

இதனால் கூட்டணியில் தொடரமுடியாது என்கிற நிலைக்கு கடந்த திங்கள் கிழமை அன்றே வந்துவிட்டது தே.மு.தி.க. அ.தி.மு.கவுடன் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு விஜயகாந்த் வீட்டிற்கு திரும்பிய சுதீஷ் உடனடியாக அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரனைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அ.தி.மு.கவுடன் கூட்டணிச் சிக்கலை பற்றியும் சொல்லியிருக்கிறார். உடனே தினகரன் எங்கள் அணிக்கு வாருங்கள் வட மாவட்டங்களில் நீங்கள் எதிர்பார்க்கும் தொகுதிகளை அளிக்கிறோம் என்று உறுதி கொடுத்துள்ளார். அதன்பிறகு நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுத்துச் சொல்வதாக சுதீஷ் தரப்பில் சொல்லியிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக இன்று நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகுவதாக தே.மு.தி.க முடிவெடுத்துள்ளது. அ.ம.மு.க தரப்புடன் பேச்சுவார்த்தையைத் தொடர தே.மு.தி.க தரப்பு முடிவெடுத்துள்ளது.