Friday, June 18
Shadow

தரக்குறைவாக பேசிய பாமகவுக்கே 23 தொகுதிகள், தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும்!

2016 தேர்தலில் கலைஞர் கடைசிவரை கூட்டணிக்காக போராடியும் வரை வராத விஜயகாந்த், திருமா – வைகோ விரித்த வலையில் சிக்கி, அந்த தேர்தலில் பெரும் தோல்வியை தேமுதிக தழுவியது. இந்த தோல்விக்கு பின் தேமுதிக கிராப் மொத்தமாக சரிந்தது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடனேயே மீண்டும் கூட்டணி அமைத்தது. ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. இந்த நிலையில் வருகின்ற சட்டசபை தேர்தலில் மீண்டும் அதிமுக கூட்டணியில் 41 சீட் வேண்டும் என எதிர் பார்த்த பிரேமலதாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தேமுதிக

தங்கள் இதுவரை அதிமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவே இல்லை என பிரேமலதா தெரிவித்திருந்தார். அதிமுக பாமகவோடு கூட்டணி பேரம் முடிந்த நிலையில், அடுத்து பிஜேபியோடு பேசி வந்தது ஆனால் தேமுதிகவிடம் பேசாமலேயே சைலன்ட் மோடில் இருந்தது. ஆனாலும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி மூவரும் விஜயகாந்த்தை வீட்டிற்கு சென்று சந்தித்துவிட்டு வந்தனர். ஆனால் அப்போது 41 சீட் எதிர்பார்த்திருந்த தேமுதிகவுக்கு வெறும் 9 சீட் மட்டுமே கொடுப்பதாக அதிர்ச்சியை குடுத்தது இந்த டீம். கடைசியாக தங்களுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேமுதிக கூறியிருந்தது.

ஆனால் பேச்சுவார்த்தையில் 15 தொகுதிக்கு மேல் தாண்டவில்லை அதிமுக, இந்நிலையில் பெரம்பலூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் “தலையே போனாலும் தேமுதிகவை தலைகுனிய விடமாட்டோம்” என்று தெரிவித்தார்.

நன்றியை மறந்த இவர்களோடு நாம் ஏன் கூட்டணிக்கு காத்திருக்க வேண்டும்? முதல்வரையும், துணை முதல்வரையும் தரக்குறைவாக பேசி வந்த ராமதாஸ், அன்புமணியோடு கூட்டணி போட்டு 23 தொகுதிகள் வாரி கொடுக்கும் போது, 2011 ல் நம்மால் ஆட்சியை பிடித்த இவர்கள், நமக்கு துரோகம் செய்யும் போது அதை பொறுத்துக்கொண்டு சேரவேண்டுமா என தொண்டர்கள் கலங்க, இதனால் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக தேமுதிக துணை பொதுச் செயலாளரும் விஜயகாந்தின் மைத்துனருமான எல் கே சுதீஷ் ஒரு பேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் “நமது முதல்வர் விஜயகாந்த், நமது கொடி, நமது சின்னம் முரசு” என பதிவிட்டது. இந்த ஒற்றைப்பதிவால் அதிமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேமுதிக