Thursday, June 24
Shadow

ஜாதிவாரியாக திமுக அமைச்சர்கள் பட்டியல்!

மு.க.ஸ்டாலின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு. திமுக அமைச்சர்கள். நாளை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள நிலையில், அறிவிப்பு. மு.க.ஸ்டாலின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு.

நாளை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள நிலையில், அறிவிப்பு

மு.க.ஸ்டாலினுடன் 34 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர்

ஜாதிவாரியாக யார், யார் அமைச்சர்கள் எந்தெந்த துறை அமைச்சர்கள் என்பதை இதோ பாருங்கள்.

முக்குலத்தோர்


முக்குலத்தோர் ஜாதியைச் சேர்ந்த 4 பேர் அமைச்சர்களாகிறார்கள். ஐ.பெரியசாமி – கூட்டுறவுத்துறை, தங்கம் தென்னரசு – தொழிற்துறை, பி.மூர்த்தி – வணிகவரி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி – பள்ளிகல்வி ஆகியோர் முக்குலத்தோர் ஜாதியைச் சேர்ந்தவர்களாகும்.

வன்னியர்

ஸ்டாலின் – முதல்வர் -இசை வேளாளர். துரைமுருகன் – நீர்ப்பாசனம்- வன்னியர், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோரும் வன்னியர்.

கொங்கு வெள்ளாள கவுண்டர்

முத்துசாமி – வீட்டுவசதி, மு.பெ.சாமிநாதன் – செய்தித்துறை, சக்கரபாணி – உணவுத்துறை, செந்தில்பாலாஜி – மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆகியோர் கொங்கு வெள்ளாள கவுண்டர் ஜாதியைச் சேந்தவர்களாகும். அதாவது கொங்கு வெள்ளாள கவுண்டர் ஜாதியிலிருந்து 4 பேர் அமைச்சராக்கப்பட்டுள்ளனர்.

ரெட்டி, நாயுடு


கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் – வருவாய், கே.என்.நேரு – உள்ளாட்சி நிர்வாகம் ஆகியோர் ரெட்டியார் ஜாதியைச் சேர்ந்தவர்களாகும். எ.வ.வேலு – பொதுப்பணித்துறை, ஆர்.காந்தி – கைத்தறி, சேகர்பாபு -அறநிலையத்துறை ஆகிய 3 பேரும் நாயுடு ஜாதியைச் சேர்ந்தவர்களாகும்.

நாடார்

நாடார் சமூகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. சமூக நலன் துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் நாடார் ஜாதியினராகும். இவர்கள் முறையே, தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் வென்றவர்களாகும். அதாவது 3 பேருமே தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.