Sunday, April 11
Shadow

அதிமுக கூட்டணியிலிருந்து ஜி.கே.வாசன் விலகல்!

அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று முதல்முதலாக கூட்டணியை உறுதி செய்த ஜி.கே.வாசனுக்கு இதுவரை அதிமுக சீட் ஒதுக்கவில்லை. அதிமுக உடன் நட்பில் இருந்து வந்த ஜி.கே.வாசன் தமாகா சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வகையில் 12 தொகுதிகளை கேட்டு வந்தார்.

அதிமுக கூட்டணி

ஆனால் முதல் முதலாக கூட்டணியை உறுதி செய்த தமாகாவுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. பாமக, பாஜ, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் தான் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது. பாமக பேசிவந்தது. இந்த கட்சிகளுடனான பேச்சுவார்த்தை முடிந்த பின்பு தமாகாவுக்கு உரிய தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தனர்.

குறைவான தொகுதிகள் இதனால் 12 தொகுதிகள் கேட்ட நிலையில் 7 தொகுதிகளாவது தமாகாவுக்கு ஒதுக்கப்படும் என்ற நிலை இருந்து வந்தது. அதற்கான பேச்சுவார்த்தையும் தொடர்ந்தது. ஆனால் 7 தொகுதிகள் கூட அதிமுக தரவில்லை என்று கூறப்படுகிறது. இனால் வாசன் அதிருப்தியில் இருந்தார். சீட்டுக்கட்டு போல சரியும் அதிமுக கூட்டணி