Saturday, January 16
Shadow

நாயுடன் தனியாக வாழும் சிறுவன் அங்கிட்!

உத்திரபிரதேசம் மாநிலம் முஸாஃபர் நகர் பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி பலரையும் உருகச் செய்து வருகிறது. புதிய கடைக்கு எதிரே தன்னுடைய செல்ல நாயுடன் சிறுவன் தூங்கும் புகைப்படம் தான் அந்த வைரல் போட்டோ. அங்கிட் என்று அந்த சிறுவனுக்கு 9 முதல் 10 வயது தான் இருக்கும் அந்த சிறுவனுக்கு எதுவுமே நினைவில் இல்லை இதற்கு முன் வசித்தது எங்கே? உடன் இருந்தது யார்? எந்த எந்த தகவலும் நினைவில் இல்லை என்று சொல்லப்படுகிறது.

அந்த சிறுவனுக்கு தெரிந்தது எல்லாம் தன்னுடைய பெயர் தாயின் பெயர் தந்தை சிறையில் உள்ளார் தாய்தான் தன்னை தத்தெடுத்தார் என்பது மட்டுமே .

டீக்கடையில் வேலை என கடந்த சில வருடங்களாக சின்ன சின்ன வேலைகள் செய்து ஒரு நாடோடி வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் அந்த சிறுவன் அவருக்கு துணையாக அவருடனே இருக்கிறது அவரது செல்ல நாயே. தான் சம்பாதிக்கும் பணத்தை தனக்கும் தன் நாய்க்கும் உணவாக செலவிடுகிறார் . சில நாட்களுக்கு முன்பு பூட்டிய கடைக்கு எதிரே தன்னுடைய நாயுடன் படுத்து தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை யாரோ ஒருவன் படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட அது தற்போது வழங்கியுள்ளது. செய்தி வெளியானதை அடுத்து முசபர்நகர் போலீசார் சிறுவனை பல இடங்களிலும் தேடி கண்டுபிடித்து உள்ளனர். சிறுவன் குறித்து பேசிய டீக்கடைக்காரர் உரிமையாளர் அங்கிட் மிகவும் மரியாதையான ஆள் சுயமரியாதைக்காரர் கூட, அவர் இலவசமாக எதுவுமே வாங்கமாட்டார். தன்னுடைய நாய்க்கு கூட அவர் இலவசமாக பால் வாங்கிக் கொள்ள மாட்டார். அந்த நாய் அவரை விட்டுப் பிரியவே பிரியாது அங்கு வேலை பார்த்து முடிக்கும் வரை நாய் அமர்ந்து இருக்கும் என்று தெரிவித்தார். தற்போது காவல்துறை பாதுகாப்பில் உள்ளார் எங்கிருந்து வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். எல்லா இடங்களுக்கும் அனுப்பி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் போலீசார் அங்கு பழைய கதை தெரியும் வரை அவர் அருகில் உள்ள பள்ளியில் படிக்க உள்ளார். போலீசாரின் வேண்டுகோளை ஏற்று அருகில் உள்ள பள்ளி ஒன்று அவருக்கு இலவச கல்வி கொடுக்க முன் வந்துள்ளது.

அங்கிட்

அங்கிட்

Source : twitter

சித்ரா தற்கொலை காரணம் இதுதான்!