Sunday, April 11
Shadow

பாஜக அமைச்சரின் உல்லாச வீடியோ வெளியானது!

இளம்பெண்ணுடன் கர்நாடக அரசு விருந்தினர் மாளிகையில் உல்லாசமாக இருந்துள்ளார் ( உல்லாச வீடியோ ) அம்மாநில நீர் வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோலி.

வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி அந்த இளம் பெண்ணுடன் இவ்வாறு அவர் நடந்து கொண்ட நிலையில் அந்த சம்பவம் பற்றிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பலாத்காரத்துக்கு உள்ளான அந்தப் பெண் இந்த வீடியோ காட்சிகளை எப்படியோ பதிவு செய்து உள்ளார். இது தெரிந்ததும் அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோலி அந்த பெண்ணை மிரட்ட ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

video link https://twitter.com/i/status/1367028276749860865

உல்லாச வீடியோ

வட கர்நாடகாவில் உள்ள அணைக்கட்டுகள் தொடர்பாக ஒரு டாக்குமென்டரி தயாரிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். அவரது அழகில் மயங்கிய ரமேஷ் ஜார்கிகோலி, ஆசை வார்த்தை கூறி அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட திட்டமிட்டார். கர்நாடக மின்சாரத் துறையில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி டெல்லியில் உள்ள கர்நாடக மாநில அரசின் விருந்தினர் மாளிகைக்கு இளம் பெண்ணை அழைத்துச் சென்று அங்குள்ள அறையில் உல்லாசமாக இருந்துள்ளார். இப்போது அந்த பெண்ணை அமைச்சர் மிரட்டுவதால் அவர் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். போலீஸ் கமிஷனரை சந்தித்து இதுபற்றி தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த வீடியோ புயலை கிளப்பிய நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோலி, தனக்கு எதிராக யாரோ ஒருவர் சென்று புகார் கொடுத்துள்ளதன் பின்னணியில் அரசியல் சதி திட்டம் இருக்கிறது. நான் நிரபராதி என்று நிரூபித்து காட்டுவேன். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் கூறுகையில் இது தனிப்பட்ட விஷயம் போல இருக்கிறது. முறையாக விசாரித்து விட்டு பதில் சொல்கிறோம் என்று தெரிவித்துவிட்டார்.