அதிமுக பாமக ( pmk aiadmk alliance ) கூட்டணியை உறுதி செய்ய, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் டாக்டர் ராமதாஸை சந்தித்து பேசினர்.. அப்போது மருத்துவர் ராமதாஸ் 2 கண்டிஷன்களை முன்வைத்துள்ளார்..
கண்டிஷன் ஒன்று, தங்களுக்கு துணை முதல்வர் பதவி, மற்றொன்று அதிக இடங்கள், அதிலும் தாங்கள் எதிர்பார்க்கும் தொகுதிகள் செய்ய வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.. இதைதவிர, வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை தேர்தலுக்கு முன்னரே செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது..
இதையெல்லாம் கேட்டு என்ன பதில் சொல்வதென்றே தரியாமல் தங்கமணி சற்று திணறியதாக தெரிகிறது.. ஆனால், உறுதியான பதிலையும் சொல்லவில்லை போல தெரிகிறது. பிறகு, வரும் 27ம் தேதி அதிமுக பிரசார பொதுக்கூட்டத்திற்கு, டாக்டர் ராமதாஸை அழைத்து விட்டு வந்துள்ளனர். ஆனால், பாமகவுக்கு எத்தனை தொகுதி, எந்நெந்த தொகுதி என எந்த முடிவும் எடுக்காத நிலையில் பிரசார கூட்டத்தில் பங்கேற்க முடியாது என ராமதாஸ் அமைச்சர்களிடம் சொல்லியதாகவும் கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாமக நீடிப்பது பெருத்த கேள்விக்குறியாகி வருகிறது!

Pmk AIADMK Alliance condition
- பாமகவுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் .
- வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு
- அதிக இடங்கள், அதிலும் தாங்கள் எதிர்பார்க்கும் தொகுதிகள்
Source : Twitter
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? Who is Next Chief Minister?
Tamil News Headings