வங்கக்கடலில் உருவான நிவர் புயளுக்கு பின்பு தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஓன்று உருவாகியுள்ளது. இந்நிலையில் அந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி அதன்பின் புயலக உருவெடுத்து நாளை மறுநாள் (டிசம்பர் 2 ஆம் ந்தேதி) மாலை அல்லது இரவு இலங்கை திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலுக்கு புரெவி எனப் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது கன்னியாகுமரிக்கு கிழக்கு 1040 கி.மீ தூரத்தில் காற்றழுத்தத் தாழ்வாக நிலைகொண்டுள்ளது. திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 640 கி.மீ தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.

அடுத்த 12 மணி நேரத்தில் ஆழந்த காற்றழுத்தத் தாழ்வாக வலுப்பெறும் எனவும், அதற்கடுத்த 12 மணிநேரத்தில் புயலாக மாறி கரையை கடக்கும் எனத் தெரிவித்துள்ளது. இந்த புயலால் டிசம்பர் 2 மற்றும் 3-ந்தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.
Source : Twitter