Sunday, April 11
Shadow

சசிகலா விடுதலை நாள் முன்னேற்பாடுகள் தீவிரம்!

சசிகலா விடுதலை நாள் எப்போது கர்நாடக உள்துறை மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சசிகலா விடுதலை நாள்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா கட்டவேண்டிய தொகை 10 கோடி 10 ஆயிரம் ரூபாயை நீதிமன்றத்தில் முறைப்படி செலுத்தி உள்ளார். இதன் மூலம் அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி அன்று சசிகலா விடுதலை உறுதியானது. சசிகலா விடுதலை செய்யப்படும் நாளில் அவரது பாதுகாப்பு தொடர்பாக கர்நாடக உள்துறைக்கு கர்நாடக உளவுத் துறை அளித்துள்ள அறிக்கை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா விடுதலை ஆகும் தேதி அன்று ஏராளமான தொண்டர்கள் பரப்பன அக்ரஹார சிறை வளாகத்திற்கு சசிகலாவை அழைத்துச் செல்ல வரலாம் என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில்சசிகலாவின் தொண்டர்கள் மற்றும் சிறை வளாகம் அவர்களது அமைந்துள்ள பகுதிக்கு வராத வகையில் எல்லையிலேயே தடுத்து நிறுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வழக்கமாக விடுதலையாகும் கைதிகளுடன் விடுதலை செய்யாமல் அவரது பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரவு நேரம் விடுதலை செய்யலாம் என திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. வழக்கமான கைதிகள் 7 மணிக்கு விடுதலை செய்யப்படுவார்கள். அனால் சசிகலாவை இரவு 9.30 மணிக்கு விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சசிகலாவை கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வரி உரிய பாதுகாப்புடன் அழைத்துச் சென்று அங்கு அவருக்கு ஏற்பாடு செய்திருக்கும் வாகனத்தில் அனுப்பி வைக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது . கர்நாடக உளவுத்துறையின் அறிக்கை படி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டாலும், சூழலை பொறுத்து மாற்றங்கள் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சசிகலா விடுதலை நாள்

Source : Twitter

யார் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும்? கருத்து கணிப்பு