Friday, June 18
Shadow

TN Election 2021 Updates – 08-03-2021

AIADMK | TN Election 2021 Updates | #EdappadiKPalaniswami

TN Election 2021 Updates : ஆதரவாளர்களுக்கு சீட்: அதிமுகவில் வேட்பாளர் தேர்வில் சிக்கல்?

அதிமுகவில் வேட்பாளர்களை இறுதி செய்வதில் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு என தகவல்.

DMK #Karunas #TNAssemblyElection2021

தேர்தலில் திமுகவுக்கு கருணாஸ் கட்சி ஆதரவு

திமுகவிற்கு நடிகர் கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு; திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் ஆதரவுக் கடிதத்தை வழங்கினார் அக்கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் அஜய் வாண்டையார்.

TN Election 2021 Updates

AMMK | TTV Dhinakaran | TN Assembly Election 2021

உண்மையான தர்ம யுத்தம் இப்போது தான் தொடங்குகிறது – டிடிவி தினகரன்

அமமுகவில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் செய்ய வந்த டிடிவி தினகரன் பேட்டி

சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறேன்.

தீய சக்தியையும், துரோக சக்தியையும் எதிர்த்து உண்மையான தர்ம யுத்தம் தொடங்குகிறது.

மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் களமிறங்குகிறோம்

நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது

DmkCpm | TN Election 2021

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.