ஜல்லிக்கட்டுக்கு ( Jallikkattu ) அனுமதி : பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி.
கொரோனா சூழலில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி
| #Pongal2021 | #jallikkattu
தமிழர்களின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டினை நடத்த ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன், தற்போது கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, வரும் 2021ம் ஆண்டில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது. #jallikattu

Jallikkattu
ஜல்லிக்கட்டு வழிமுறைகள்
ஜல்லிக்கட்டு ( Jallikkattu ) போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு ஜல்லிக்கட்டு( Jallikkattu ), மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் 300 மாடுபிடி வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி – தமிழக அரசு
மாடுபிடி வீரர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் – தமிழக அரசு பார்வையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் – தமிழக அரசு Jallikkattu
சீமான் பேச்சு
தேர்தலில் ரஜினி, கமலுக்கு கிடைக்கும் அடி, இனி எந்த நடிகர்களும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் – நாம் தமிழர் கட்சி சீமான்
எடப்பாடியார் தமிழர்; அவர் ஆட்சி நன்றாக இல்லை என்றால் நாங்கள் வந்து நல்லாட்சி தருகிறோம்; அதற்காக மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது! – சீமான்
நடித்தால் மட்டும் நாடாளும் தகுதி வந்துவிடும் என்கிற எண்ணம் மாற வேண்டும்; நல்லகண்ணு தவிர இங்கு யாரும் நல்ல அரசியல்வாதி அல்ல! – சீமான்
நடிகர் செந்தில் ட்வீட்
இந்த படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அஜித் நான் பார்த்த ஒரு தாழ்மையான மற்றும் வலிமையான மனிதர். அவர் வரவிருக்கும் #Valimai படத்திற்கு வாழ்த்துக்கள்! என நடிகர் செந்தில் ட்வீட் செய்துள்ளார்.
திமுக
கிராமசபைக் கூட்டம் ஸ்டாலின்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்னம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்தி மக்கள் பிரச்னைகளை கேட்டு வருகிறார்.
தமிழகம் முழுவதும் திமுகவினர் கிராம சபைக் கூட்டங்களை இன்று தொடங்கியுள்ளனர்
இன்று யார் யாரோ கட்சி தொடங்குகிறார்கள்; கட்சி தொடங்கியவுடன் ஆட்சி என்கிறார்கள் -ஸ்டாலின் 1949-ல் திமுக தொடங்கப்பட்டு 1967-ல் தான் ஆட்சியை பிடித்தது -கிராம சபைக் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு.
பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு முதல்வர் பச்சைத் துரோகம் -ஸ்டாலின் விவசாயிகளை பிரதமர் மோடி இதுவரை நேரில் சந்திக்காதது ஏன் ? -ஸ்டாலின் கேள்வி.
அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்றத்தை நாடுவோம் -ஸ்டாலின்
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற பிரதமர் தயக்கம் காட்டக் கூடாது -ஸ்டாலின்
பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை
கடலூர் (கி) – காட்டுமன்னார்கோயில் தொகுதி லால்பேட்டை பிரச்சார பயணத்தின் போது பெருமளவில் திரண்டு என்னை வரவேற்ற கழகத்தினர்-பொதுமக்கள்- இஸ்லாமிய சகோதர-சகோதரிகள் & கூட்டணியினருக்கு நன்றி. தமிழகத்தை மீட்க கழகத்துக்கு உறுதுணையாக பொதுமக்கள் இணைந்ததில் மகிழ்ச்சி என உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்
நேரு
“கருணாநிதி ஆட்சியை ஸ்டாலின் வழங்குவார்” – – கே.என்.நேரு
இளையராஜா வழக்கு
பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் வழக்கை வாபஸ் பெறுவதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவிப்பு ஸ்டூடியோ இடத்தில் உரிமை கோர மாட்டேன் – இளையராஜா “ஸ்டூடியோவில் உள்ள தமது பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்”
சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா கோரிக்கை பிரசாத் ஸ்டூடியோவில் தியானம் செய்ய மட்டும் இளையராஜா அனுமதி கோரியிருந்தார்.
பிரசாத் ஸ்டுடியோவில் உரிமை கோர மாட்டேன். தனது பொருட்களை எடுத்துக்கொள்கிறேன்.. வழக்கை வாபஸ் பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா மனு. பிரமாணபத்திரமாக இல்லாமல் மெமோவாக தாக்கல். வழக்கு இன்று மீண்டும் விசாரணை. பிரசாத் ஸ்டுடியோ நிபந்தனைகளுக்கு இளையராஜா பதில். பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்- இளையராஜா

கக்கன் நினைவு நாள்
சீமான் ட்வீட்
நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 23-12-2020 புதன்கிழமை பிற்பகல் 12 மணியளவில் தலைமை அலுவலகம் இராவணன் குடிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
ஓபிஸ் ட்வீட்
சுதந்திரப்போராட்ட வீரரும் புரட்சித்தலைவர் MGR அவர்களின் பெருமதிப்பிற்கு உரியவரும் தமிழக அரசியல்வரலாற்றில் உயர்ந்த இடத்தை பெற்ற தலைவருமான திரு.கக்கன் அவர்களது நினைவுநாளில் அவரது தன்னலமற்ற சேவையையும் தனித்துவமிக்க எளிமையையும் நினைவுகூர்ந்து போற்றி அவ்வழியினை நாமும் பின்பற்றிடுவோம்!
கமலஹாசன் தேர்தல் பிரசாரம்
புதுச்சேரி
புதுச்சேரியில் கம்பன் கலை அரங்கத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மக்களை சந்தித்தார்.
சூரப்பா விவகாரம்
அண்ணா பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் நேரில் ஆஜராக உத்தரவு வரும் திங்கள் கிழமை, உரிய ஆவணங்களுடன் ஆஜராகுமாறு உத்தரவு துணை வேந்தர் சூரப்பா விவகாரத்தில், வெங்கடேசன் நேரில் ஆஜராக உத்தரவு.
விசாரணைக்குத் தேவையான ஆவணங்களை ஒப்படைக்காததால், அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசனுக்கு சம்மன். வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராக, ஆணைய நீதிபதி கலையரசன் உத்தரவு.
எடப்பாடி பழனிச்சாமி
கிறிஸ்துமஸ் பெருவிழா
கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்துகொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ட்வீட் செய்துள்ளார் .
கன்னியாகுமரி நிகழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை புரிந்திருந்த போது, ஆரல்வாய்மொழியில் உற்சாக வரவேற்பளித்த பொதுமக்களிடம் உரையாடி மகிழ்ந்தேன்.

தேர்தல் பரப்புரை
பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் எனது ஆட்சியை சிலர் திட்டமிட்டு குறை கூறி வருகிறார்கள்! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி
புதிய வேளாண் சட்டம்
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறப் போவதில்லை – மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.
இந்தியா ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட்
டேவிட் வார்னர் விலகல் இந்தியாவிற்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியிலும் டேவிட் வார்னர் விலகல் காயம் குணமடையாததால் தொடர் சிகிச்சை தேவைப்படுவதால் அணியில் சேர்க்கவில்லை என நிர்வாகம் தகவல்.
Source : Twitter
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? Who is Next Chief Minister?