தமிழ்நாடு மின்சார பணியிடங்களை ( TNEB Vacancies ) நிரப்புவது தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவுக்கு அமமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப முயற்சிக்கும் பழனிச்சாமி அரசின் நடவடிக்கை கடுமையான கண்டனத்துக்குரியது.
தனியார் வசம் செல்லும் மின்துறை
ஏற்கனவே மின் வாரிய பொறியாளர்கள் பணிகளுக்கு வெளிமாநிலத்தவர்களை நியமித்ததால் தமிழகத்தில் பொறியியல் படித்துவிட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்கள் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள் இப்போது பராமரிப்பு பணியிடங்களுக்கு ஆள் எடுப்பதையும் தனியாரிடம் ஒப்படைத்தால் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்க மாட்டார்கள்? வாய்ப்புளிப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கு?
இளைஞர்களின் கனவு – TNEB Vacancies
இதனால் மின் வாரியத்தின் வயர்மேன் ஹெல்பர் போன்ற வேலைகளுக்கு செல்லலாம் என காத்திருக்கும் ஐடிஐ படித்த ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் கனவிலும் இந்த ஆட்சியாளர்கள் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறார்கள். முதல்வரும் அவருக்கு நெருக்கமாக அந்தத் துறையின் அமைச்சர் மின்துறை வேலைவாய்ப்பு தமிழக இளைஞர்களுக்கு அடுத்தடுத்து இழைக்கப்பட்டு வரும் இந்த அநீதிக்கு துணை போவது ஏன்?
திறமையற்ற அமைச்சர்
அதன் பின்னணி என்ன என்பன போன்ற பல சந்தேகங்கள் மக்களிடம் ஏற்பட்டிருக்கின்றன. மக்களின் அத்தியாவசிய தேவையான மின் வினியோகம் மற்றும் பராமரிப்பு பணிகளை கூட நேரடியாக மேற்கொள்ள முடியாத அளவுக்கு திறன் பெற்றதாக தமிழ்நாடு மின்சார துறை மாறிவிட்டதா? அவ்வளவு திறமையாக அந்தத் துறையின் அமைச்சர் நிர்வாகம் செய்து வருகிறாரா?
கைவிட வேண்டும்
இப்படிப் போனால் மின்வாரியத்தின் மொத்தமாக தனியாருக்கு தாரைவார்த்து விடுவார்களா என்ற கேள்விகளும் எழுகின்றன. எனவே மின் பராமரிப்பு பணிகளை டெண்டர் மூலம் தனியாரிடம் ஒப்படைத்து அந்த பணிகளுக்கு அவர்கள் வழியாக ஊழியர்களை நியமிப்பதை கைவிட வேண்டுமென பழனிச்சாமி அரசை வலியுறுத்தி டிடிவி தினகரன் தனி தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Source : twitter
