Sunday, April 11
Shadow

அம்பேத்கர் சிலை உடைப்பிற்கு டிடிவி தினகரன் கண்டனம்!

TTV Dhinakaran condemns demolition of Ambedkar statue : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகிலுள்ள செய்யூரில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் . இது சம்பந்தமாக ட்விட்டரில் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகிலுள்ள செய்யூரில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதற்கு காரணமான விஷமிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார் .

மேலும் அவர் மறைந்த தலைவர்களின் சிலைகளை அவமதிப்பது தமிழகத்தில் தொடர்கதையாகி வருவதைத் தடுத்து நிறுத்துவதற்கு காவல்துறையினர் உரிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் கருது தெரிவித்திருந்தார் .

Ambedkar statue

Ambedkar statue

Source : TTV Dhinakaran Twitter page

டி.டி.வி தினகரனை காணவில்லை, பரபரப்பு புகார்!

Tamil News Headings