TTV Dhinakaran : தமிழக முதல்வர் எடப்பாடி மக்களின் ஆரோக்கியம் தொடர்பான விஷயத்திலும் கூட நம்பிக்கைத் துரோகம் செய்ய துணிவது சரியா? என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். ட்விட்டரில் இன்று கருத்து தெரிவித்த அவர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்து இரண்டு ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை பழனிசாமி அரசு முறைப்படி மத்திய அரசிடம் இன்னும் ஒப்படைக்கவில்லை என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மேலும் ‘பதவியைவிட கொடுத்த வாக்குறுதியே முக்கியம்’, ‘முதலமைச்சரைப் பார்த்து கொரோனாவுக்கே பயம்’ என்றெல்லாம் உலக மகா நடிகர்களைப் போல வாய்கூசாமல் வசனம் பேசும் அமைச்சர்கள் மக்களின் ஆரோக்கியம் தொடர்பான விஷயத்திலும் கூட நம்பிக்கைத் துரோகம் செய்ய துணிவது சரியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்
இதன்பிறகாவது, மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான இடத்தை மத்திய அரசிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.

TTV Dhinakaran
Source : Twitter
வரும் சட்ட மன்ற தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு? கருத்துக்கணிப்பு
Tamil News Headings