Sunday, April 11
Shadow

ஒரே இலக்கு திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் : டிடிவி தினகரன்

அமமுக-அதிமுக இணைப்பு குறித்த யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதிலளித்தார். சென்னை அடையாறில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

டிடிவி தினகரன்

அப்போது அதிமுக- அமமுக இணைப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது என டிடிவி பதிலளித்தார். மேலும் பேசிய அவர், “ அமமுக தலைமையில் நிச்சயம் கூட்டணி அமையும். எங்களுடைய ஒரே இலக்கு திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான்”என்றார். மேலும் அமமுக என்ன மாதிரியான முடிவு எடுக்கும் என்பது குறித்து ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும் எனவும் கூறினார்.