Sunday, January 24
Shadow

ஹிட்லரை விட மோசமானவர் முதலமைச்சர் பழனிசாமி : டிடிவி தினகரன்

அரசு உதவி பொறியாளர்கள் ஊதியக் குறைப்பு விவகாரத்தில் ஹிட்லரை விட மோசமாக முதலமைச்சர் பழனிசாமி நடந்து கொள்கிறார் என டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த பிறகும் அரசு உதவி பொறியாளர்களுக்கான ஊதிய குழுவில் பழனிச்சாமி அரசு பிடிவாதம் காட்டுவது கொஞ்சமும் மனசாட்சி இல்லாத செயல் ஆகும் என்று டிடிவி தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் .

அரசு எந்திரத்தின் பணிகளை தொடக்க நிலையில் தங்களின் தோள்களில் சுமந்து செயல்படும் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் முதலமைச்சராக மட்டுமின்றி அந்தத் துறைகளின் அமைச்சராக இருக்கின்ற பழனிச்சாமி நேரடியாக இழைக்கின்ற மிகப் பெரிய அநீதி இது ஆகும். இது உலகத்தில் வேறெங்கும் மிக கொடுமையாக ஊதிய உயர்வு கேட்டவர்களுக்கு ரூ 15,000 வரை ஊதியத்தை குறைத்து ஹிட்லரை விட மோசமானவராக முதலமைச்சர் பழனிசாமி நடந்து கொண்டிருக்கிறார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அரசு உதவி பொறியாளர்கள் தன் வழக்கமான பாணியில் நம்ப வைத்து கழுத்தை அறுக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. இவ்வளவு கோரிக்கையில் வந்த பிறகாவது இது குறித்த தமது முடிவை பழனிச்சாமி அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அரசு உதவி பொறியாளர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு அடிப்படையில் ஊதிய விகிதத்தை திருத்தி அமைத்து அறிவிக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் .

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன் அறிக்கை

Source : twitter

யார் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும்? கருத்து கணிப்பு