Vanitha Vijayakumar : வனிதா விஜயகுமார் தற்போது மீண்டும் காதலிப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜயின் சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் தமிழ் மூன்றாவது சீஸனில் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் இவர்.

இதனிடையே கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்தார் வனிதா விஜயகுமார். வனிதா விஜயகுமார் ஏற்கனவே நடந்த இரண்டு திருமணமும் விவாகரத்தில் முடிவடைந்தது அனைவரும் அறிந்ததே. பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும் குழந்தையும் இருந்தனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்ததாக சர்ச்சை எழுந்த நிலையில் இதனால் வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் காதலிக்கிறேன் என்று பதிவு செய்திருக்கிறார் ஆனால் எதற்காக இந்த பதிவு செய்தார் அவர் மீண்டும் காதலில் விழுந்து உள்ளாரா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த பதிவு தற்போது சமூகத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Vanitha Vijayakumar Photos





Source : twitter
Sivakarthikeyan Smiling face UNSEEN Stills
Tamil News Headings