Wednesday, June 23
Shadow

VSR.ஜெகதீஷ் மருத்துவ நிதி உதவி!

இராதாபுரம் கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் VSR.ஜெகதீஷ் விபத்தில் காயமடைந்த கிளை கழக செயலாளருக்கு மருத்துவத்திற்கான நிதி உதவி வழங்கினார்.

VSR.ஜெகதீஷ்

திருநெல்வேலி மாவட்டம் உதயத்தூர் பஞ்சாயத்து வட்டவிளை
கிராமத்தை சேர்ந்த திமுக கிளை செயலாளர் முருகன். இவர் ஏழ்மை நிலையில் உள்ளவர்.திமுகவில் மிகுந்த பற்று கொண்டவர்.இவர் கடந்த சில தினங்களுக்கு முன் இரு சக்கர வாகனத்தில் தனது மனைவி மற்றும் பேத்தி உடன் செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் இவரும் இவரது பேத்தியும் காயமடைந்தனர். பின்னர்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இதை அறிந்த இராதாபுரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் VSR.ஜெகதீஷ் அன்னாரை அவரது வீட்டில் நேரில் சென்று சந்தித்து அவருக்கு மருத்துவ சிகிச்சைக்கு தேவையான நிதியை அவரிடம் நேரில் கொடுத்து உதவினார்.அப்போது அருகில் இராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி,உறுமன்குளம் ஊராட்சி கழக செயலாளர் அமைச்சியர்,இராதாபுரம் ஊராட்சி கழக செயலாளர் கோவிந்தராஜ்,முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர்.ரமேஷ்,இராதாபுரம் கணேசன், ஒன்றிய மாணவரணி
கண்ணன்,திசையன்விளை குமார் ஆகியோர் இருந்தனர்.