Tuesday, May 11
Shadow

Tag: ammk

அதிமுக தலைமை ஏற்க சசிகலாவுக்கு அழைப்பு!

அதிமுக தலைமை ஏற்க சசிகலாவுக்கு அழைப்பு!

News
விருதுநகரில் சசிகலாவை அதிமுக தலைமை ஏற்க வருமாறு போஸ்டர் ஒட்டிப்பட்டதால் பரபரப்பு. விருதுநகர் அருகே செந்நெல்குடி பகுதியில் சசிகலாவை அதிமுகவின் தலைமை ஏற்று ஒருங்கிணைக்க வருமாறு அழைப்பு விடுத்து போஸ்டர் ஒட்டியதால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது. ஏற்கனவே அஇஅதிமுக, அமமுக என இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம் அருகில் உள்ள செந்நெல்குடி கிராமத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் தியாக தலைவி சசிகலா அவர்களே அதிமுக தலைமை ஏற்க வருக. ராணுவக் கட்டுப்பாட்டோடு இருந்த கழகத்தின் இன்றைய நிலைமை பாருங்கள் தாயே. போர் புரிய போர்ப்படை இருப்பினும் போர்ப்படை தளபதி மௌனம் காப்பது ஏனோ. கழகத்தை காக்கும் காவல் தெய்வமே வாருங்கள், கழகம் மட்டுமல்லாது தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காகவும் போராடுவோம் உங்கள் தலை...
போயஸ் கார்டனில் சசிகலா புதிய இல்லம்!

போயஸ் கார்டனில் சசிகலா புதிய இல்லம்!

News
சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்கு எதிர்ப்புறம் சசிகலா பிரமாண்டமான வீடு ஒன்றைக் கட்டி வருகிறார்( சசிகலா புதிய இல்லம் ). அந்த இல்லத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்நிலையில் இன்று பிற்பகல் போயஸ் கார்டன் சென்ற சசிகலா, இளவரசி மற்றும் விவேக் ஆகியோர் இல்லத்தின் கட்டுமான பணிகளை நேரடியாக பார்வையிட்டனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இந்த இல்லத்தை பார்வையிட்ட சசிகலா அதன் பின்னர் புறப்பட்டு சென்றார். ...
கள்ள ஓட்டு போடவந்த பாமக! தட்டி கேட்ட அமமுக!

கள்ள ஓட்டு போடவந்த பாமக! தட்டி கேட்ட அமமுக!

News
கள்ள ஓட்டு போடவந்த பாமகவினரை தட்டி கேட்ட அமமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள டிடிவி தினகரன், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இன்று தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. மேலும், சில இடங்களில் கள்ள ஓட்டுகள் போடும் முயற்சிகளும் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நெமிலி பேரூராட்சி வாக்குச்சாவடி எண் 221 மற்றும் 223-ல் சிலர் கள்ள ஓட்டுகளைப் போட முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த வாக்குச்சாவடிகளில் அரசியல் கட்சியினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தைக் க...
வாக்காளர் லிஸ்ட்டில் சசிகலா பெயர் இல்லை!

வாக்காளர் லிஸ்ட்டில் சசிகலா பெயர் இல்லை!

News
நாடே எதிர்பார்க்கும் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் சசகிலா பெயர் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.. இதுதான் இந்த திடீர் பரபரப்புக்கு காரணம்..! சசிகலா சலசலப்பு இப்போது வரை விரட்டி வருகிறது.. இந்த தேர்தலில் இவரது பங்களிப்பு இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. இவரைதான் தினகரன் மலைமாதிரி நம்பி கொண்டிருந்தார். கடைசியில் அதிரடியாக களம் இறங்கி அதிமுகவுக்கே செக் வைத்து வருகிறார். அதனால்தான், இவர் சிறையில் இருந்து வெளிவருவதற்கு முன்பேயே அதிமுக தரப்பு பலவித கெடுபிடிபிடிகளை விதித்தது.. சசிகலாவை கண்டு சற்று கலக்கமும் அடைந்தது..! சசிகலா விஷயத்தில் கடைசிவரை எடப்பாடியார் பிடிவாதம் காட்டினார்.. கட்சியிலும் சேர்க்கவில்லை.. கூட்டணியிலும் சேர்க்கவில்லை.. அதிமுக கூட்டணி பலவீனமாகி போனது… தென்மண்டலத்தில் அதிருப்திகளும் சேர்ந்துவிட்ட நிலையில்தான், சசிகலா மீதான சாப்ட் கார்...
அதிமுகவில் சசிகலா இணைப்பு தொடர்பான அறிக்கை எந்த நேரத்திலும் வெளியாகும்?

அதிமுகவில் சசிகலா இணைப்பு தொடர்பான அறிக்கை எந்த நேரத்திலும் வெளியாகும்?

News
சட்டசபை தேர்தல் களத்தில் புதிய திருப்பமாக அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கும் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது (சிகலா இணைப்பு) தொடர்பான அறிக்கை எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள். தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் களைகட்டி அனலடித்துக் கொண்டிருக்கிறது. சட்டசபை தேர்தல் கருத்து கணிப்புகள் பெரும்பாலும் ஒரே மாதிரியான முடிவுகளை வெளிப்படுத்துகின்றன. இந்த கருத்து கணிப்புகள் பொதுவாக திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும்; திமுக- அதிமுக கூட்டணிக்கு இடையேயான வாக்கு சதவீத வித்தியாசம் குறைந்தது 10% இருக்கலாம்; தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகக் குறைந்தது 8% வாக்குகளை பெறக் கூடும் என்றே தெரிவிக்கின்றன. மேற்கு தமிழகத்தில் கொங்கு கவுண்டர்களின் வாக்குகளை அதிமுக கணிசமாக தக்க வைக்கும் என்பதாக இந்த கருத்து கணிப்புகள் சொல்லுகின்ற...
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு 6 மாதத்திற்கு மட்டும்தான் : ஆர் பி.உதயகுமார்

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு 6 மாதத்திற்கு மட்டும்தான் : ஆர் பி.உதயகுமார்

News
பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் மக்களை பிளவுபடுத்தி எதிர்க்கட்சிகள் வாக்கு பெற முயற்சி என அமைச்சர் ஆர் பி.உதயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டி பேசினார். திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பொட்டிபுரம், சித்திரெட்டிபட்டி மீனாட்சிபுரம் சௌடார்பட்டி வலையபட்டி பூசலப்புரம் மதிப்பனூர் நாகையாபுரம் இடையபட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தீவிர வாக்கு சேகரித்தார்அதனை தொடர்ந்து பொட்டிபுரத்தில் வாக்கு சேகரித்தபோது அங்கு கட்டிடப் பணிகள் நடைபெற்று வந்தது அப்போது கட்டிட தொழிலாளிக்கு உதவும் வண்ணம் தானும் கட்டிடத்திற்கு தண்ணீர் பைப்பு மூலம் அடித்தார். இன்றைக்கு எதிர்க்கட்சிகள் பல்வேறு பொய் பிரசாரங்களை செய்து வருகின்றனர். சட்டமன்றத்தில் தற்காலியமான மசோதா தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் வேண்டும் என்றே திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 68 சமுதாயத்திற்கு 7.5 இட ஒதுக்கீடு...
கடனில் தத்தளிக்கும் அரசு எப்படி இலவச வாக்குறுதி வழங்க முடியும் : டிடிவி தினகரன்

கடனில் தத்தளிக்கும் அரசு எப்படி இலவச வாக்குறுதி வழங்க முடியும் : டிடிவி தினகரன்

News
இலவச வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வர அதிமுக- திமுக இருகட்சிகளும் ஏமாற்றிடும் செயலுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது அமமுக. அக்கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து டிடிவி தினகரன் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நெய்வேலியில் நடந்த அமமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், திமுக ஐபேக் நிறுவனத்தையும், அதிமுக பணமூட்டையை நம்பியும் தேர்தலை சந்திப்பதாக சாடினார். தமிழகம் மிகப்பெரிய அளவில் கடனின் தத்தளித்து கொண்டிருக்கும் போது, இருகட்சிகளும் போட்டி போட்டு இலவச வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது குறித்து விமர்சனம் செய்தார். இலவச வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வர அதிமுக- திமுக இருகட்சிகளும் ஏமாற்றிடும...
அதிமுக தேர்தல் அறிக்கை ஏமாற்று வேலை!

அதிமுக தேர்தல் அறிக்கை ஏமாற்று வேலை!

News
அதிமுக தேர்தல் அறிக்கையில் இலவச திட்டங்கள் அறிவிப்பு என்பது ஏமாற்று வேலை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் கோயிலில் சாமி தரினசம் செய்த பின் நேற்று செய்தியாளரிகளிடம் பேசிய அவர், “இலவசங்கள் தருகிறேன் என மக்களை ஏமாற்றுவதை விட அவர்கள் சுயமாக சம்பாதிக்க வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்தார். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளதாகவும் இளைஞர்களுக்கு, பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவது, வருங்கால தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் என்றும் அவர் தெரிவித்தார். அமமுக தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளதாகவும், மது ஆலைகளையும் படிப்படியாக மூடப்படும் என தெரிவ...
அமமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அமமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

News
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தது. விரைவில் வேட்புமனுத்தாக்கல் தொடங்கவிருக்கும் நிலையில் தற்போது கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இன்று அ.தி.மு.க, திமு.க, தே.மு.தி.க , மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்ற தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் இன்று காலை அமமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதனை கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருக்கிறார். ...
அமமுக கூட்டணியில் தேமுதிக!

அமமுக கூட்டணியில் தேமுதிக!

News
அதிமுக தேமுதிக மூன்றாவது கட்டப் பேச்சுவார்த்தையில் தொகுதி எண்ணிக்கையில் கிட்டதட்ட இறுதி நிலைக்கு வந்துள்ளது. ஆனால் குறிப்பாக 13 முதல் 15 தொகுதிகளை கொடுக்க அ.தி.மு.க தரப்பு சம்பதம் தெரிவித்தது. இதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தே.மு.தி.க-வும் வந்தது. அதோடு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் தே.மு.தி.க-வுக்கு ஒரு இடமும் வழங்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால், கரன்சி விசயத்தில் அ.தி.மு.க தரப்பு காட்டிய கறார்தான் தே.மு.தி.க-வின் உச்சக்கட்ட கோபத்திற்குக் காரணம் என்கிறார்கள். தேர்தலில் தே.மு.தி.க வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை அ.தி.மு.க தரப்பு ஏற்றுக்கொள்வதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அந்தத் தொகையை அ.தி.மு.க தரப்பே நேரடியாக கையாளும் என்றும், தே.மு.தி.க வேட்பாளர்களிடம் ஒப்படைக்க முடியாது என்றும் சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு தே.மு.தி.க தரப்பு ஒப்புக்கொள்ளவில்லை. சீட்டு முக்கியமா ந...