Thursday, June 24
Shadow

Tag: nellai

பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் மரணம்!

பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் மரணம்!

News
பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா. திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகில் உள்ள வேப்பிலையன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். நடிப்பு ஆசையால் சென்னை வந்த அவர், ’ஆண்பாவம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுக மானார். சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நெல்லை சிவா, வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். அம்பாசமுத்திரம் அம்பானி, கண்ணும் கண்ணும், கற்றது களவு, சகுனி, பாபநாசம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நெல்லை சிவா, டி.வி.தொடர் களிலும் நடித்துள்ளார். கண்ணும் கண்ணும் படத்தில், கிணற்றைக் காணோம் என்று வரும் வடிவேலு டார்ச்சரால், இன்ஸ்பெக்டராக இருக்கும் சிவா, வேலையை விட்டே போவது போன்ற காமெடி காட்சி பிரபலமான ஒன்று. திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்த நெல்லை சிவா, அவர் பேசும் திருநெல்வேலி வழக்குக்காகக் கவனிக்கப்பட்டவர். ஊரடங்கு காரணமாக தற்போது ...
நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு மோதும் அதிமுக பாஜக!

நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு மோதும் அதிமுக பாஜக!

News
அதிமுக கூட்டணியில் நெல்லை சட்டமன்ற தொகுதி, பாஜவுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக வெளியான தகவலால் அதிமுகவினர் கடும் அப்செட்டாகி உள்ளனர். அதிமுக கூட்டணியில் நீண்ட பேச்சுவார்த்தை இழுபறிக்கு இடையே பாஜவுக்கு 20 சீட் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியும் பாஜவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கேட்ட எண்ணிக்கையை விட குறைவான இடங்களே ஒதுக்கப்பட்டாலும், கேட்ட ெதாகுதிகளை தர அதிமுக சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பாஜவினரை உற்சாகமடைய செய்தாலும், அதிமுகவினரை கடும் அப்செட்டில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக கடந்த சில மாதங்களாகவே வேட்பாளர் கனவில் பல கோடி செலவு செய்துள்ள அதிமுக நிர்வாகிகள், தங்களது தொகுதி தாரை வார்க்கப்படுவதால் உள்ளடி வேலைக்கும் தற்போதே தயாராகி வருகின்றனர். இதற்காக ஆதரவாளர்களை திரட்டும் பணியையும் துவங்கி இருக்கின்றனர். அதிமுகவில் இருந்து விலகி பாஜவில...
மாற்று கட்சியினர் திமுகவில் இணைவு

மாற்று கட்சியினர் திமுகவில் இணைவு

News
இராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஏற்பாட்டில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர் இராதாபுரம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்தில் உள்ள நாம் தமிழர்,அதிமுக,பாஜக மற்றும் மாற்று கட்சியினர்  சுமார் 150 க்கும் மேற்பட்டோர் இராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் VSR.ஜெகதீஷ்.BA  ஏற்பாட்டில், திருநெல்வேலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம்.MP முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். இந்த நிகழ்வில் இராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மி.ஜோசப் பெல்சி., வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயன் கழக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வானது இராதாபுரம் மணியம்மை மகாலில் வைத்து நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கூத்தன்குழி ராஜா ஏற்பாட்டில் நாம் தமிழர் கட்சியனர் 40 பேர் கழகத்தில் இணைந்தனர். இராதாபுரம் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஐயப்பன் தலைமையில் அதிமு...