என் மண் என் மக்கள் யாத்திரையின்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ : அண்ணாமலை விளக்கம்

என் மண் என் மக்கள் யாத்திரையின்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ : அண்ணாமலை விளக்கம்

  மார்ச் 29, 2024 | 04:45 pm  |   views : 90


நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்ட தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்கெனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், கோவையில் தேர்தல் பிரசாரத்தின்போது ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மறைத்து வைத்து பணம் கொடுப்பதுபோல் வீடியோ வெளியாகி வைரலானது.





இந்த வீடியோவின் உண்மை நிலையை கண்டறிய கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த வீடியோ கடந்த ஆண்டு 'என் மண் என் மக்கள்' யாத்திரையின்போது எடுக்கப்பட்டது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கோவை மாவட்ட கலெக்டரிடம் அனைத்து ஆதாரங்களும் இருப்பதால், அந்த வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்ப்பதற்கு பதிலாக, 29.07.2023 அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கள் என் மண் என் மக்கள் யாத்திரையின் போது எடுக்கப்பட்ட வீடியோவை பார்க்கவும். பாசத்தின் அடையாளமாக ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது நமது கலாச்சாரம் ஆகும்.





Also read...  கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்


ஆனால் தேர்தல் நேரத்தில் இதை நாங்கள் கடைப்பிடிப்பதில்லை. மற்றவர்களைப் போல வாக்குகளுக்காக பணத்தில் நம்பிக்கை வைக்க மாட்டோம் என்று நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம்; இன்று பொய்களைப் பரப்பும் கட்சிகள் பணப்பட்டுவாடா செய்யும்போது, கலெக்டர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்."இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார். With all the resources at the disposal of the @CollectorCbe, instead of checking on the authenticity of a video, he decides to respond to something that was shot on 29.07.2023 during our En Mann En Makkal Yatra in the Ramanathapuram District. It's in our culture to reward those… https://t.co/cjWMU2IcV9— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 29, 2024


எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்

2024-05-17 12:49:50 - 2 days ago

பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழையைத் தொடர்ந்து பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர். இந்த நிலையில் பழைய குற்றால அருவியில் குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுவன், வெள்ளத்தில் அடித்துச்


ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிக்க காங்கிரஸ் தயார் : பிரதமர் மோடி பேச்சு!

2024-05-17 08:40:17 - 2 days ago

ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிக்க காங்கிரஸ் தயார் : பிரதமர் மோடி பேச்சு! காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் : பிரதமர் மோடி பேச்சு! நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளன. எஞ்சியுள்ள 3 கட்ட தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமா நடந்து வருகின்றன. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில்


கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

2024-05-16 10:37:27 - 3 days ago

கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல் அ..ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 20 ஆம் தேதி வரை கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும், சென்னை


வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து

2024-05-15 16:33:30 - 4 days ago

வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து நெல்லை மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லையின் பல்வேறு இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தில்


அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது!

2024-05-15 15:43:03 - 4 days ago

அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது! அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் : மத்திய பாஜக அரசு மும்முரம்! இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதா பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது. கடந்த மார்ச் 11ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி, பாகிஸ்தான்,


நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?!

2024-05-15 13:13:04 - 4 days ago

நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! திமுக பேச்சாளர் சிலர் வரம்பு மீறி பேசுவதும், அவதூறு கருத்து பேசி கட்சி மேலிடத்திடம் இருந்து வாங்கி கட்டிக் கொண்ட சம்பவம் அதிகம் அரங்கேறி வருகிறது. அப்படி திமுகவில் உள்ள முக்கிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய


கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!!

2024-05-15 13:03:19 - 4 days ago

கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!! கார்த்திக்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்களை விசாரித்து போதை பொருட்கள் எங்கிருந்து யார் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- குமுதம் யூ- டியூப் நேர்காணல் ஒன்றில் பாடகி சுசித்ரா என்பவர்,


குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை

2024-05-15 06:21:11 - 4 days ago

குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர். பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீர் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக ஊர் மக்கள் இன்று புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார், கிராம நிர்வாக அலுவலகர், கூடுதல் ஆட்சியர்