சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத்

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத்

  ஏப்ரல் 05, 2024 | 05:17 am  |   views : 748


இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர்,``பா.ஜ.க மீதான என் அதீத விருப்பத்தைப் பார்த்து, மற்ற கட்சிகள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கினர். என் வீட்டைக் கூட சேதப்படுத்தினர்.



வரவிருக்கும் தேர்தல் ஒரு தர்ம யுத்தம். மலையகப் பெண்கள் என்னைத் தேர்ந்தெடுத்து பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்துவதன் மூலம் தகுந்த பதிலைக் கொடுப்பார்கள். மக்களுக்குச் சேவை செய்யவே அரசியலுக்கு வந்தேன். நான் ஏற்கனவே சினிமா துறையில் வெற்றி பெற்றுள்ளேன், அரசியலிலும் வெற்றி பெறுவேன்" எனத் தெரிவித்தார்.



இந்த நிலையில், தேர்தலை முன்னிட்டு அவர் தொடர்ந்து தனியார் செய்தி நிறுவனங்களுக்குப் பேட்டியளித்து வருகிறார். சமீபத்தில் டைம்ஸ் நவ் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தபோது,`சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்....?" எனக் கேள்வி எழுப்பினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை காங்கிரஸ் தலைவர் பி.வி ஸ்ரீனிவாஸ், ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால் மற்றும் பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கின்றனர்.



டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பியுமான ஸ்வாதி மாலிவால் வீடியோவைப் பகிர்ந்து,``படித்த மற்றும் விவேகமானவர்களுக்கு வாக்களியுங்கள்" எனப் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கிய தலைவர். இந்தியத் தேசிய காங்கிரஸின் தலைவராக பணியாற்றி, பின்னர் பார்வர்ட் பிளாக்கை உருவாக்கினார்.



Also read...  ஜெயக்குமார் மரண விவகாரத்தில் தேவைப்பட்டால் சபாநாயகரிடமும் விசாரணை நடத்தப்படும்! நெல்லை ஐ.ஜி. கண்ணன்



இந்தியாவின் சுதந்திர இயக்கத்தில் அவர் முக்கிய பங்கு வகித்தாலும், 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு அவர் பிரதமர் பதவியை வகிக்கவில்லை. 1947-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. அவரே மே 27, 1964 வரையில் இறக்கும் வரை பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

2024-05-16 10:37:27 - 16 hours ago

கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல் அ..ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 20 ஆம் தேதி வரை கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும், சென்னை


வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து

2024-05-15 16:33:30 - 1 day ago

வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து நெல்லை மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லையின் பல்வேறு இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தில்


அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது!

2024-05-15 15:43:03 - 1 day ago

அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது! அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் : மத்திய பாஜக அரசு மும்முரம்! இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதா பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது. கடந்த மார்ச் 11ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி, பாகிஸ்தான்,


நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?!

2024-05-15 13:13:04 - 1 day ago

நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! திமுக பேச்சாளர் சிலர் வரம்பு மீறி பேசுவதும், அவதூறு கருத்து பேசி கட்சி மேலிடத்திடம் இருந்து வாங்கி கட்டிக் கொண்ட சம்பவம் அதிகம் அரங்கேறி வருகிறது. அப்படி திமுகவில் உள்ள முக்கிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய


கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!!

2024-05-15 13:03:19 - 1 day ago

கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!! கார்த்திக்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்களை விசாரித்து போதை பொருட்கள் எங்கிருந்து யார் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- குமுதம் யூ- டியூப் நேர்காணல் ஒன்றில் பாடகி சுசித்ரா என்பவர்,


குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை

2024-05-15 06:21:11 - 1 day ago

குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர். பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீர் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக ஊர் மக்கள் இன்று புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார், கிராம நிர்வாக அலுவலகர், கூடுதல் ஆட்சியர்


பிரபல நடிகருடன் ஓரினசேர்க்கையில் இருந்த தனுஷ்..?

2024-05-14 17:02:39 - 2 days ago

பிரபல நடிகருடன் ஓரினசேர்க்கையில் இருந்த தனுஷ்..? தமிழ் திரைத்துறையில் மெல்லிய குரல் கொண்ட பாடகிகளுக்கு மத்தியில் தனது தனித்துவமான குரலால் சிறந்த பின்னணி பாடகி ஆகும் முத்திரை பதித்தவர் பாடகி சுசித்ரா. 2002 க்கு பின் பல்வேறு படங்களில் பாடல்கள் பாடி ரசிகர்களை இழுத்த சுசித்ராவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வந்தன. மன்மதன், வல்லவன், போக்கிரி போன்ற படங்களில் அவர் பாடிய


கங்கனா ரனாவத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

2024-05-14 15:19:11 - 2 days ago

கங்கனா ரனாவத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். மண்டி தொகுதிக்கான வாக்குப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று கங்கனா ரனாவத் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் கங்கனா ரனாவத் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.