தேனி - தேடல் முடிவுகள்

தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு

2024-04-19 15:40:29 - 2 weeks ago

தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது. அதன்பின்


மத்தியில் மீண்டும் மோடி அவர்கள் பிரதமராக வருவது தான் நாட்டுக்கு நல்லது - டி.டி.வி. தினகரன்

2024-04-19 13:42:24 - 2 weeks ago

மத்தியில் மீண்டும் மோடி அவர்கள் பிரதமராக வருவது தான் நாட்டுக்கு நல்லது - டி.டி.வி. தினகரன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்காக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர். இந்த நிலையில்,


தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல்

2024-04-14 04:58:49 - 3 weeks ago

தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல் தேனி மக்களவைத் தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற டிடிவி தினகரன், இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய தங்க தமிழ்ச்செல்வன், தவிர அதிமுகவில் புதுமுகமான நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில், அதிமுக என்னும் கட்சிதான். டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் அதிமுகவில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க., டி.டி.வி. தினகரன் வசமாகும் : அண்ணாமலை

2024-04-13 07:08:42 - 3 weeks ago

தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.,  டி.டி.வி. தினகரன் வசமாகும் : அண்ணாமலை பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், தேனி தொகுதியில் டி.டி.வி. தினகரனே போட்டியிடுகிறார். தேனி தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி. தினகரன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக தமிழக பா.ஜ.க. தலைவர்


தேனி: நடைபயிற்சியின்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

2024-04-10 03:29:51 - 4 weeks ago

தேனி: நடைபயிற்சியின்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள்


நாயுடு சமுதாயத்தின் 12 சதவீத ஓட்டு பாஜகவிற்கு ஆதரவு!

2024-04-06 07:56:03 - 1 month ago

நாயுடு சமுதாயத்தின் 12 சதவீத ஓட்டு பாஜகவிற்கு ஆதரவு! வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில்,அ.தி.மு.க., வில் நான்கு பேரும், தி.மு.க., வில் இருவரும், காங்கிரஸ், தே.மு.தி.க., - -ம.தி.மு.க., வில் தலா ஒருநாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக இடம் பெற்றுள்ளனர். பா.ஜ., வில் நடிகை ராதிகா ஒருவரே இடம் பெற்றுள்ளார். அவர் சினிமா துறையை சார்ந்தவர். முழுநேர அரசியல்வாதிக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்ற அதிருப்தி


நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன்

2024-04-03 03:56:20 - 1 month ago

நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன் “ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது” என்று அமமுக பொதுச்செயலாளரும் , தேனி பாராளுமன்ற அமமுக வேட்பாளருமாகிய டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசினார். “3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய


தேர்தலுக்குள் கச்சத்தீவை மீட்டு கொடுத்தால் எங்கள் வாக்கு பா.ஜ.க.வுக்கு- சீமான் பேச்சு

2024-04-02 04:52:36 - 1 month ago

தேர்தலுக்குள் கச்சத்தீவை மீட்டு கொடுத்தால் எங்கள் வாக்கு பா.ஜ.க.வுக்கு- சீமான் பேச்சு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேனி மாவட்டம் கம்பம், போடி, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி, பழனி ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் நடந்த பிரசார கூட்டத்தில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-பணம் இருப்பவர்கள்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. அரசியல் என்பது மக்களுக்காக உழைக்க மட்டுமே.


அன்று தினகரன் வீட்டுக் காவல் நாயாக இருந்தோம்... இன்று நாங்கள் சீறும் சிங்கங்கள் - ஆர்.பி.உதயகுமார் பேச்சு

2024-03-30 14:06:21 - 1 month ago

அன்று தினகரன் வீட்டுக் காவல் நாயாக இருந்தோம்... இன்று நாங்கள் சீறும் சிங்கங்கள் - ஆர்.பி.உதயகுமார் பேச்சு நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடும் நாராயணசாமியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-"கடந்த 15 ஆண்டுகளாக தேனி பக்கமே எட்டிப் பார்க்காதவர் டி.டி.வி. தினகரன். ஜெயலலிதாவால் நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து 10 ஆண்டுகள் ஒதுக்கிவைக்கப்பட்டவர் அவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் தலைகாட்ட ஆரம்பித்தார்.


நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு

2024-03-28 03:13:53 - 1 month ago

நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சிட்டிங் எம்.பி ரவீந்திரநாத் உடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து தேனி பழனிசெட்டிபட்டி அருகே செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ``தற்போதுள்ள காலகட்டத்தில் ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி ஆகிய தலைவர்கள் களத்தில் வெற்றி பெற்றால்தான், அ.தி.மு.க காப்பாற்றப்படும் என்பதால், இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.