தேர்தல் - தேடல் முடிவுகள்

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது: 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி

2024-05-06 04:57:12 - 2 days ago

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது: 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் வெளியிடப்பட்டது. வழக்கமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்தான் தேர்வு முடிவுகளை வெளியிடுவார்.


கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை - சுப்ரீம் கோர்ட்டு

2024-05-03 11:45:56 - 5 days ago

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை - சுப்ரீம் கோர்ட்டு டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து


முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்த பா.ஜ.க. பிரமுகர்

2024-04-29 07:05:28 - 1 week ago

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்த பா.ஜ.க. பிரமுகர் தமிழகத்தில் ஒரே கட்ட மாக கடந்த 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இதையொட்டி தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டான் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் ஓய்வு எடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் புறப்பட்டார். சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த


நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

2024-04-25 06:32:52 - 1 week ago

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்


நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார் - பிரியங்கா காந்தி

2024-04-24 07:34:24 - 2 weeks ago

நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார் - பிரியங்கா காந்தி பெங்களூரு,கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலார் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், "கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்கள் தாலியையும், தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. நாடு 70 ஆண்டுகளாக சுதந்திரமாக இருந்து வருகிறது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு உள்ளது. 'தாலி'


பக்குவமற்ற அரசியல்வாதி ராகுல் காந்தி : பினராயி விஜயன்

2024-04-24 01:25:25 - 2 weeks ago

பக்குவமற்ற அரசியல்வாதி ராகுல் காந்தி : பினராயி விஜயன் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன. இதில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் அங்கம் வகிக்கிறது. எனினும் பினராயி விஜயன் தலைமையிலான அக்கட்சி, காங்கிரசுக்கு எதிராக பேசுவதும், பினராயிக்கு எதிராக காங்கிரசார் பேசுவதும் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி உள்ளது.


கோவையில் ஒரு லட்சம் வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இல்லை : அண்ணாமலை

2024-04-19 15:48:51 - 2 weeks ago

கோவையில் ஒரு லட்சம் வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இல்லை : அண்ணாமலை தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்த நிலையில் கோவை மக்களவை தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என


தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு

2024-04-19 15:40:29 - 2 weeks ago

தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது. அதன்பின்


கோவையில் பாஜக பணப்பட்டுவாடா... ரூ 81,000 மற்றும் பூத் சிலிப் பறிமுதல்!

2024-04-18 07:00:35 - 2 weeks ago

கோவையில் பாஜக பணப்பட்டுவாடா... ரூ 81,000 மற்றும் பூத் சிலிப் பறிமுதல்! கோவையில் பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வைத்திருந்த ரூபாய் 81 ஆயிரம் மற்றும் வாக்காளர்கள் விவரம் அடங்கிய பூத் சிலிப் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ஒரே கட்டமாக நாளை (19 ஆம் தேதி) மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று மாலையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்த நிலையில்,


தி.மு.க.வை தோல்வியடைய செய்து மக்கள் தண்டிக்க வேண்டும்

2024-04-17 07:33:01 - 3 weeks ago

தி.மு.க.வை தோல்வியடைய செய்து மக்கள் தண்டிக்க வேண்டும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தான் மத்தியில் மீண்டும் அமைய வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பம் ஆகும். இந்தியா முழுவதும் வீசும் அதே மோடி ஆதரவு அலை தான் தமிழ்நாட்டிலும் வீசுகிறது. தமிழகத்தின் பெரும் பான்மையான பகுதிகளுக்கு பரப்புரை சென்று வந்ததன் மூலம் மோடி