பக்குவமற்ற அரசியல்வாதி ராகுல் காந்தி : பினராயி விஜயன்

பக்குவமற்ற அரசியல்வாதி ராகுல் காந்தி : பினராயி விஜயன்

  ஏப்ரல் 24, 2024 | 01:25 am  |   views : 206


மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன. இதில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் அங்கம் வகிக்கிறது. எனினும் பினராயி விஜயன் தலைமையிலான அக்கட்சி, காங்கிரசுக்கு எதிராக பேசுவதும், பினராயிக்கு எதிராக காங்கிரசார் பேசுவதும் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி உள்ளது.





காங்கிரசுக்கு எதிராக கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களை இறக்கி கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஓட்டுகள் பிரிந்து செல்லக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அது பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அமைய கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.





Also read...  வெயிலில் மயங்கி விழுந்த பச்சைக்கிளி... தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்திய போலீஸ்காரர்


இதேபோல், இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்தபோதும், அவர்கள் தங்கள் மாநிலங்களில் தனித்தனியாகவே போட்டியிடுகின்றனர். தங்கள் கட்சிகளைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக இறக்கி உள்ளனர். காங்கிரசுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் கூட்டணிக்கான முக்கியத்துவம் அளிக்கப்படாமல் அக்கட்சிகள் தேர்தலை எதிர்கொண்டுள்ளன.





இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் முடிவு செய்யப்படாமல் உள்ளார். இது பிரசாரத்தில் கட்சிகள் தலைவரை முன்னிறுத்துவதற்கு முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற பல காரணங்களால், இந்தியா கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது.





இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கண்ணூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:நாட்டில் பல தீவிர அரசியல் முன்னேற்ற விசயங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, ராகுல் காந்தி இந்தியாவில் இருப்பது இல்லை. அவர் ஒரு தீவிர அரசியல்வாதி இல்லை. இதுவே நாட்டிலுள்ள மக்களின் அனுபவம். இதுபற்றி நாம் விமர்சிப்பதில் இருந்து விலகியே இருக்கிறோம்.





ஏனெனில், அவர் வேறொரு கட்சியில் இருந்து வந்தவர். அது அவர்களுடைய உள்கட்சி விவகாரம். ஆனால், பொது தேர்தல் நடக்க கூடிய நேரமிது. இந்த தருணத்தில், அவர் கேரளாவுக்கு வந்து மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்துள்ளது அவர் பக்குவமற்றவர் என காட்டுகிறது என கடுமையாக சாடியுள்ளார்.


எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




சவுக்கு சங்கர் வெளியே வருவதில் சிக்கல்: அடுத்தடுத்து பாயும் வழக்குகள்

2024-05-09 06:12:32 - 2 hours ago

சவுக்கு சங்கர் வெளியே வருவதில் சிக்கல்: அடுத்தடுத்து பாயும் வழக்குகள் சென்னையை சேர்ந்தவர் சங்கர். இவர் சவுக்கு மீடியா என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.அதில் பல்வேறு அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதுதவிர பல்வேறு யூடியூப் சேனல்களில் அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வந்தார். அண்மையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண்


ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி!

2024-05-09 05:59:23 - 2 hours ago

ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி! காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில்


வெயிலில் மயங்கி விழுந்த பச்சைக்கிளி... தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்திய போலீஸ்காரர்

2024-05-09 03:23:30 - 5 hours ago

வெயிலில் மயங்கி விழுந்த பச்சைக்கிளி... தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்திய போலீஸ்காரர் தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகலில் வெப்ப அலை வீசுவதால் வெளியில் செல்லும் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். நெல்லையில் கடந்த 15 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. கடந்த 4-ந்தேதி முதல் அக்னி நட்சத்திர வெயில் அனலாக சுட்டெரிப்பதால் மக்கள் வெளியில் நடமாட முடியாதவாறு தவிக்கின்றனர். கடந்த சில தினங்களாக


தம்பியின் மாமியாருடன் கள்ளக்காதல்: லாரி டிரைவர் வெட்டிக்கொலை - திருவள்ளூரில் பரபரப்பு

2024-05-09 03:22:52 - 5 hours ago

தம்பியின் மாமியாருடன் கள்ளக்காதல்: லாரி டிரைவர் வெட்டிக்கொலை - திருவள்ளூரில் பரபரப்பு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள கே.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் சிவகுமார் (வயது 33). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது தம்பி தேவேந்திரன் (30). நேற்று மதியம் தனது வீட்டின் அருகே சிவகுமார் மது அருந்திக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென தம்பி தேவேந்திரன்


கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்.. புது வகையான காய்ச்சல் எல்லாமே கேரளாவில்தான் தொடங்குகிறது!

2024-05-07 12:11:44 - 1 day ago

கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்.. புது வகையான காய்ச்சல் எல்லாமே கேரளாவில்தான் தொடங்குகிறது! கேரளாவில் மேற்கு நைல் காய்ச்சல் (வெஸ்ட் நைல் காய்ச்சல்) பரவத் தொடங்கியிருக்கிறது. திருச்சூர், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு நைல் காய்ச்சல் பாதிப்பு இருப்பதை மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உறுதி செய்துள்ளார். அத்துடன், அனைத்து மாவட்டங்களிலும் உஷாராக


ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நாங்குனேரி எம்எல்ஏ ரூபி மனோகரனிடம் விசாரணை

2024-05-07 06:37:01 - 2 days ago

ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நாங்குனேரி எம்எல்ஏ ரூபி மனோகரனிடம் விசாரணை நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நாங்குனேரி எம்எல்ஏ ரூபி மனோகரனிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது. சாத்தான்குளம் தனியார் கல்லூரியில் ரூபி மனோகரனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நெல்லை திசையன்விளை அருகே உள்ள தமது வீட்டின் அருகே ஜெயக்குமார் பாதி எரிந்த நிலையில் சடலமாக


ஜெயக்குமார் கொலை? பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்

2024-05-07 04:36:06 - 2 days ago

ஜெயக்குமார் கொலை? பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் மாயமான நிலையில் அவரது வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் தீயில் எரிந்து கரிக்கட்டையான நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த


இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம்

2024-05-06 13:03:36 - 2 days ago

இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் “மனைவியுடன் ஆண் கொள்ளும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல” என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. இது திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மீண்டுமொருமுறை அனைவரையும் பேசவைத்துள்ளது. தன் தீர்ப்பில் நீதிமன்றம், ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் திருமண உறவில் நடக்கும் இத்தகைய விஷயங்கள், பாலியல் வன்கொடுமை