தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல்

தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல்

  ஏப்ரல் 14, 2024 | 04:58 am  |   views : 239


தேனி மக்களவைத் தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற டிடிவி தினகரன், இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய தங்க தமிழ்ச்செல்வன், தவிர அதிமுகவில் புதுமுகமான நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில், அதிமுக என்னும் கட்சிதான். டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் அதிமுகவில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், தேனி மக்களவைத் தேர்தல் களம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.




போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் யார்? - தேனி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணியில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக மதன் ஜெயபால் ஆகியோர் களத்தில் நிற்கின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக வென்ற ஒரு தொகுதி தேனிதான். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத் களம் கண்டு வெற்றியைப் பதிவு செய்தார்.




திமுக சார்பாக தேனியில் களம் காணும் தங்க தமிழ்ச்செல்வன் ஏற்கெனவே தேனி மக்களவையில் களம் கண்டவர்தான். 2019-ம் ஆண்டு அமமுக சார்பாகப் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் 1,44,050 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம்பிடித்தார். இந்தநிலையில், திமுகவில் இணைந்த அவருக்கு தேனியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவரை எதிர்த்து அமமுக சார்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எதிர்த்துப் போட்டியிடுகிறார். அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். ஆகவே, டிடிவி தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன் போட்டி என்பது ’குரு - சிஷ்யன்’ மோதலாகியுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.



Also read...  ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த 7 மாத கர்ப்பிணி மரணம் - வளைகாப்புக்காக சென்றபோது நேர்ந்த பரிதாபம்




அதிமுக வேட்பாளர் நாராயணசாமி 40 ஆண்டுகளாக அதிமுக கட்சியில் இருக்கிறார். ஒன்றிய செயலாளராக இருந்தவருக்கு எம்பி சீட் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், தங்க தமிழ்ச்செல்வன் போல் தொகுதி மக்களுக்கு அறிமுகமானவர் இல்லை. இப்போதுதான் தேனி மக்கள் இவரை அறிய தொடங்குகின்றனர். திமுக மீதான அதிருப்தி மற்றும் அதிமுக வாக்கு வாங்கியை அடிப்படையாகக் கொண்டு களமாடி வருகிறார். மேலும், புதிதாகப் போட்டியிடுவதால் தனக்கு எம்பியாகும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையும் முன்வைத்து மக்களிடம் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.



1999-ம் ஆண்டு தேனியில் நடந்த மக்களவைத் தேர்தலில் டிடிவி தினகரன் அதிமுக சார்பாகப் போட்டியிட்டு வென்றிருக்கிறார். எனவே, அப்போது தொடங்கி தொகுதி மக்களுக்கு நன்றாக அறிமுகமானவராகத் தான் டிடிவி.தினகரன் இருக்கிறார். குறிப்பாக, இந்தத் தேர்தலில் வார்டு வார்டாக சென்று களப்பணி செய்து வருகிறார். இவருக்கு தேனி களம் பாசிட்டிவ்வாகத்தான் உள்ளது.



மாற்று கட்சியைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு என்பதால் திமுக உட்கட்சி அளவில் சிறு மோதல் இருக்கிறது என்னும் கருத்து சொல்லப்படுகிறது. இதனால், தேர்தல் பணிகளில் சுணக்கம் ஏற்படலாம். எனினும், திமுக சார்பாகக் களம் காணும் தங்க தமிழ்ச்செல்வன் ஏற்கெனவே இந்தத் தொகுதியில் போட்டியிட்டவர்தான். எனவே, மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் மற்றும் ஆளும் திமுகவின் சப்போர்ட் எனக் களம் இவருக்கு அணுக எளிமையாகவுள்ளது. குறிப்பாக, மாநில அரசின் திட்டங்களான உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம் ஆகியவற்றைக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.




தேனி மாவட்டத்தில் போடி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் மாம்பழ சாறு தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதேபோல் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துதல், வைகை அணையைத் தூர்வாருதல், கண்ணகி கோயில் செல்வதற்கான பாதையை அமைத்தல், ’திண்டுக்கல் - சபரிமலை’ ரயில்பாதைத் திட்டத்தைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொகுதியில் உள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்கள் இதனைக் கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர். இருப்பினும் இக்கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையிலேயே உள்ளன. ஆகவே, அனைத்துக் கட்சிகளும் இதனை வாக்குறுதியாக அளித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.



தேனி களத்தைப் பொறுத்தவரையிலும், ’திமுக, அதிமுக, அமமுக’ என மூன்று கட்சி வேட்பாளர்களுக்கும் தொகுதியில் நல்ல செல்வாக்கு இருப்பதால், களத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. எனினும், ’தங்க தமிழ்ச்செல்வன் - டிடிவி தினகரன்’ இடையே கடுமையான போட்டி இருக்கும் என சொல்லப்படுகிறது.




ஆண்டிபட்டி, தேனி, உசிலம்பட்டி, சேடபட்டி போன்ற பகுதிகளில் முக்குலத்தோர் ஓட்டுகள் அதிகம் உள்ளன.அதனால், அதே சமூகத்தைச் சேர்ந்த இந்த இருவர் மத்தியில் ’டஃப் ஃபைட்’ இருக்கும். இந்தக் கடுமையான போட்டியில் மக்கள் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.




எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. கேவியட் மனு தாக்கல்

2024-05-03 11:52:16 - 19 hours ago

சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. கேவியட் மனு தாக்கல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்காக அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதன்பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு கூடி சசிகலா, தினகரன் ஆகியோரை அப்பதவிகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கியது. பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் தன்னை நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா,


கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை - சுப்ரீம் கோர்ட்டு

2024-05-03 11:45:56 - 19 hours ago

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை - சுப்ரீம் கோர்ட்டு டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து


ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த 7 மாத கர்ப்பிணி மரணம் - வளைகாப்புக்காக சென்றபோது நேர்ந்த பரிதாபம்

2024-05-03 05:15:11 - 1 day ago

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த 7 மாத கர்ப்பிணி மரணம் - வளைகாப்புக்காக சென்றபோது நேர்ந்த பரிதாபம் சென்னையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி பெண் தவறி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள், உடனடியாக பக்கத்து பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நடுவழியில் நிறுத்தினர். பின்னர்


வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : சட்டம் அமலுக்கு வந்தது

2024-05-02 10:37:23 - 1 day ago

வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : சட்டம் அமலுக்கு வந்தது கடந்த சில ஆண்டுகளாக பலரும் தங்கள் வாகனங்களில் பிரஸ், போலீஸ், டாக்டர், வழக்கறிஞர், ஐகோர்ட்டு, தலைமை செயலகம், ஆர்மி என பல்வேறு ஸ்டிக்கர்களை ஒட்டி பயணிக்கிறார்கள். இப்படி பயணிப்பவர்களை பிடித்து ஆய்வு செய்தால் அதில் பலர் போலியாக ஒட்டியது தெரியவந்தது. மேலும் குற்றச்செயல்களை செய்துவிட்டு தப்பிக்க சில ரவுடிகள் மனித உரிமை, பிரஸ், ஊடகம்,


நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

2024-05-02 06:38:29 - 2 days ago

நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு புதுடெல்லி,இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் 13 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2024-25 கல்வி ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கியது. www.nta.ac.in, exams.nta.ac.in/NEET என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என


முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்த பா.ஜ.க. பிரமுகர்

2024-04-29 07:05:28 - 5 days ago

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்த பா.ஜ.க. பிரமுகர் தமிழகத்தில் ஒரே கட்ட மாக கடந்த 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இதையொட்டி தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டான் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் ஓய்வு எடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் புறப்பட்டார். சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த


நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது: திருமாவளவன் அறிவிப்பு

2024-04-29 06:58:55 - 5 days ago

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது: திருமாவளவன் அறிவிப்பு சென்னை,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு


நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

2024-04-25 06:32:52 - 1 week ago

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்