குட் பேட் அக்லி படக்குழுவிடன் இழப்பீடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு இப்படம் மிகுந்த திருப்தியளித்துள்ளதால் முதல் மூன்று நாள்களில் ரூ. 100 கோடி வசூலைக் கடந்துள்ளது..இந்த நிலையில், குட் பேட் அக்லி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த 3 பாடல்களை அவரது அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக வழக்கறிஞர் மூலம் படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சள் குருவி மற்றும் இளமை இதோ இதோ ஆகிய பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக ரூ. 5 கோடி இழப்பீடு கேட்டுள்ளார்.மேலும், மூன்று பாடல்களையும் படத்தில் திரையிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், 7 நாள்களுக்குள் நிபந்தையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் இளையராஜா தெரிவித்துள்ளார்.இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது..
சிறப்புச் செய்தி
குட் பேட் அக்லி படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ்!
Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்!
முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்
தொடர்புடைய செய்திகள்
விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி - முதல் பாடல் வெளியீடு!
49 minutes ago
மக்களை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும்- ப...
1 hour ago
தருமபுரியில் கனமழை எதிரொலி: அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து வி...
1 hour ago