பொல்லாத ஆசைகள்... 29 படத்தின் புதிய பாடல் வெளியானது!

ரத்னகுமார் இயக்கிய 29 திரைப்படத்தின் புதிய பாடல் இன்று வெளியாகியுள்ளது.


மேயாத மான் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ரத்னகுமார் இயக்கிய புதிய திரைப்படம் ’29’.இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நாயகனாக விது, நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் விது ஜிகர்தண்டா - 2, ரெட்ரோ திரைப்படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர்.இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இவர் இசையில் சீலே சீலே, மேன்சன் குத்து, பூ பாடல் ஆகியவை முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்த நிலையில், 29-ன் நான்காவது பாடலான பொல்லாத ஆசைகள் பாடல் இன்று (ஏப். 27) வெளியாகியுள்ளது.உமா தேவி எழுதிய இப்பாடலை சத்யபிரகாஷ், சைந்தவி ஆகியோர் பாடியுள்ளனர். இப்படம் மே 8 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.



Tags / குறிச்சொற்கள்: RATHNAKUMAR PREETHI ASRANI
பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel