தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

கரூரில் முதலமைச்சர் விஜய் Road Show

கரூர் அட்லஸ் மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கரூர் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று பேசினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் ரோடுஷாவில் பங்கேற்று வருகிறார்.

கரூரில் திருக்காம்புலியூர் முதல் ஆட்சியர் அலுவலகம் வரை 10 கி.மீ தூரத்திற்கு முதலமைச்சர் விஜய் ரோடுஷா நடத்துகிறார். சாலையின் இருபுறங்களிலும் தொண்டர்கள் மற்றும் மக்கள் திரண்டு முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

திறந்தவெளி வாகனத்தில் சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களை நோக்கி சையசைத்தபடி முதலமைச்சர் விஜய் ரோடுஷோவில் பங்கேற்று வருகிறார்.

முதலமைச்சர் விஜயின் ரோடுஷோவுக்கு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel