லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ டிரெய்லர் வெளியானது!
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘டிசி’. இப்படத்தில் லோகேஷுடன் இணைந்து வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் இசை ஆல்பம் வெளியான நிலையில், படம் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
டிரெய்லரின்படி, காவலர்கள் செய்யும் தவறை மையமாக கொண்டு கதை நகர்கிறது. தப்பு செய்தால் போலீஸ் தண்டிக்கும், ஆனால் போலீஸே தப்பு செய்தால்? என்று இடம்பெற்றுள்ள வசனங்கள், தற்போதைய தமிழ்நாடு சூழலுக்கு (லாக்கப் மரணங்கள்) ஏற்றப் படம் என்பதை உணர்த்துகிறது.
மேலும் லோகேஷ் படங்களில் வழக்கமாக இடம்பெறும் அதே ரத்தக் காட்சிகள், கொலைகள் என காதல் கலந்த அதிரடி கதையாக இருக்கிறது.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel