தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சட்டசபையில் காரசார விவாதம்

பொறுப்பு அமைச்சரால் காலியாக உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் செல்ல முடியுமா? என இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.

அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், காலியாக உள்ள தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா? என அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசமாகக் கேட்டார்.

எடப்பாடி ஆவேசம்

எடப்பாடி தவெக வேட்பாளர் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பதிலளித்தார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய சபாநாயக்ர் ஜேசிடி பிரபாகர், எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

ஒரு மாதத்தில் 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஆதாயம் இன்றி ராஜினாமா செய்வார்களா? என ஆஸ்டின் கேள்வி எழுப்பினார்.

இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க முடியும். நாம் முடிவு செய்ய முடியாது என்றார் சபாநாயகர்.

6 தொகுதிகளில் எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில் மக்கள் தங்களது பிரச்சனைகளை யாரிடம் கூறுவது என எம்எல்ஏ ஆஸ்டின் கேள்வி எழுப்பினார்.

மக்கள் பிரச்சனைகளைக் கேட்டு நிறைவேற்றவதற்காக 6 தொகுதிகளுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் ஆதவ் தெரிவித்தார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் இடையே கடும் வாக்குவாதம் உருவானதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் தமிழக சட்டசபையில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது.

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இதில் பேசிய திமுக உறுப்பினர் ஆஸ்டின் பேசுகையில், பட்ஜெட் கூட்டத்தில் உதயநிதி பங்கேற்பதை தடுக்க சதி நடந்தது. சதியை முறியடித்து அவையில் வீற்றிருக்கிறார் உதயநிதி. சிறுபான்மை ஆணைய தலைவர் பெலிக்ஸ் ஜெரால்டு தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில் பங்கேற்கக் கூடாது என தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், சிறுபான்மை ஆணைய தலைவர் தனிப்பட்ட விவாதம். பொதுமேடையில் பேசவே கூடாது என்றெல்லாம் கிடையாது. கடந்த ஆட்சியில் பீட்டர் அல்போன்ஸ், லியோனி போன்றவர்கள் அரசியல் விவாதங்களில் பேசி உள்ளனர் என்றார்.

அப்போது எழுந்த உறுப்பினர் தளவாய் சுந்தரம், திமுக எம்எல்ஏ ஆஸ்டின் பல கட்சிகளில் இருந்தவர் என பேசினார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.

எம்.எல்.ஏ. ஆஸ்டின் பேசியபோது அமைச்சர் பேசலாம், அவை முன்னவர் பேசலாம் தளவாய் சுந்தரம் ஏன் பேசுகிறார்? என கேஎன். நேரு கேள்வி எழுப்பினார்.

விளக்கம் கூற வருகிறார் என நினைத்து தான் தளவாய் சுந்தரம் பேச அனுமதித்தேன் என்றார் சபாநாயகர் விளக்கம் அளித்தார்.

அதிமுக எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி பேசுகையில், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா காரணமாக காலியாக உள்ள தொகுதிகளில் யார் மக்கள் பணி செய்வது? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், எம்.எல்.ஏ. இல்லாமல் காலியாக உள்ள தொகுதிகளில் பொறுப்பு அமைச்சர்கள் கவனித்து வருகின்றனர் என்றார்.

பொறுப்பு அமைச்சரால் காலியாக உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் செல்ல முடியுமா? என இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.

அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், காலியாக உள்ள தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா? என அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசமாகக் கேட்டார்.

எடப்பாடி தவெக வேட்பாளர் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பதிலளித்தார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய சபாநாயக்ர் ஜேசிடி பிரபாகர், எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

ஒரு மாதத்தில் 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஆதாயம் இன்றி ராஜினாமா செய்வார்களா? என ஆஸ்டின் கேள்வி எழுப்பினார்.

இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க முடியும். நாம் முடிவு செய்ய முடியாது என்றார் சபாநாயகர்.

6 தொகுதிகளில் எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில் மக்கள் தங்களது பிரச்சனைகளை யாரிடம் கூறுவது என எம்எல்ஏ ஆஸ்டின் கேள்வி எழுப்பினார்.

மக்கள் பிரச்சனைகளைக் கேட்டு நிறைவேற்றுவதற்காக 6 தொகுதிகளுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் ஆதவ் தெரிவித்தார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் இடையே கடும் வாக்குவாதம் உருவானதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel