தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

இந்தியாவில் மிவி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் - பெயர் மற்றும் சிப்செட் விவரங்கள் வெளியீடு

மிவி நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போனின் டீசர்களை வெளியிட தொடங்கியது. அந்த வகையில், மிவி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மிவி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் 'மிவி ஒன் 5ஜி' என்ற பெயரில் அழைக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பெயர் மட்டுமின்றி புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்பட உள்ள சிப்செட் பற்றிய விவரங்களையும் மிவி நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதற்காக அந்நிறுவனம் டீசர் வெளியிட்டுள்ளது. மேலும், இதுபற்றிய தகவல் ப்ளிப்கார்ட் தளத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் பிரத்யேக வலைப்பக்கத்திலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

ப்ளிப்கார்ட் தளத்தின் மைக்ரோசைட் விவரங்களின் படிி மிவி ஒன் 5ஜி மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என்றும் இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 5ஜி சிப்செட் வழங்குவதும் உறுதியாகி உள்ளது.

இவற்றுடன் புதிய மிவி ஒன் 5ஜி மாடல் கிரீன் நிறம் கொண்டிருப்பதும் இதன் வளைந்த கார்னர்களை கொண்டிருப்பதும் உறுதியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் டீசர்களில் “Pretty Powerful” எனும் டேக்லைன் வருகிறது. அந்த வகையில், வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போனின் இதர விவரங்களை மிவி நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.

சமீபத்தில் வெளியான தகவல்களின் படி மிவி ஒன் 5ஜி மமாடலின் விலை இந்திய சந்தையில் ரூ. 15,000-க்கும் குறைவாகவே தொடங்கும் என்று கூறப்பட்டது. எனினும், இந்த மாடல் அறிமுகமாகும் போது தான் இதன் சரியான விலை பற்றிய விவரங்கள் வெளியாகும்.

மிவி நிறுவனம் ஏற்கனவே இயர்போன், சவுண்ட்பார், ப்ளூடூத் ஸ்பீக்கர், ஹோம் தியேட்டர் சிஸ்டம் உள்ளிட்ட சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், மிவி நிறுவனத்தின் புதிய ஒன் 5ஜி அந்நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel