வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு மக்களுடன் நிற்பது திமுக..!- உதயநிதி ஸ்டாலின்
தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு மக்களுடன் நிற்கும் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
காதல் திருமணத்தில் நிறைய கஷ்டங்கள், சவால்கள் இருக்கும்.
வரலாற்றிலேயே முதன்முறையாக டம்மி முதலமைச்சரை பார்க்கிறேன்.
தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மின்வெட்டு ஏற்படுகிறது, விலைவாசி உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பொது மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.
பொது மக்களின் பிரச்சனைகள் குறித்து கேள்வி கேட்டால் முதலமைச்சரால் பதில் சொல்ல முடியவில்லை.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்து 4 மாதங்களாகியும் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel