தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

முதலமைச்சருடன் லண்டன் செல்லாதது ஏன்? - மருத்துவ சான்றிதழ்களை வெளியிட்டார் அமைச்சர் கீர்த்தனா!

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் விஜய் அண்மையில் லண்டனிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அப்படியே லண்டனில் நடிகர் அஜித்குமார் கலந்துகொண்ட கார் ரேஸ் போட்டியையும் தொடங்கிவைத்தார். இந்த ரேஸை த்ரிஷா உள்ளிட்ட திரை பிரபலங்களும் சென்று பார்வையிட்டிருந்தனர்.

முதலமைச்சரின் இந்த பயணத்தின்போது பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, முதலமைச்சரின் தனி பாதுகாவலர், அவரின் ஜோதிட ஆலோசகர் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

ஆனால் தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்ற அரசு முறைப் பயணத்தின்போது தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா உடன் இல்லை. அவர் லண்டன் செல்லவில்லை.

இதுதொடர்பாக, தொழில்துறை அமைச்சர் இல்லாமலேயே தொழில் முதலீடுகள் ஈர்ப்பு என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்திருந்தன.

இதனைத்தொடர்ந்து அவருக்கு உடல் நலம் சரி இல்லாததாலேயே லண்டன் செல்லவில்லை என்றும், அதனாலேயே தான் முதலமைச்சருடன் சென்றதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், முதலமைச்சரின் லண்டன் பயணத்தின்போது, தனது உடல்நலக்குறைவால் தான் எடுத்துக்கொண்ட சிகிச்சைகள் தொடர்பான மருத்துவ சான்றிதழ்களை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ளார்.

சென்னை பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான மருத்துவ சான்றிதழ்களை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel