தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் ஜனவரிக்குள் ஆட்சி மாற்றம் ஏற்படும் - ஆர்.எஸ்.பாரதி

தி.மு.க. சட்டத்துறை சார்பில் செங்கல்பட்டில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மதுராந்தகம் இடைத்தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மூத்த வழக்கறிஞர்கள், சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:-

மது­ராந்­த­கம் சட்­ட­மன்ற தேர்­தல் என்­பது மிகமிக முக்­கி­ய­மான தேர்­தல் இதற்கு முன்­னால் நடை­பெற்ற இடைத்தேர்­தல் எல்­லாம் வேறு வேறு காரணங்­க­ளுக்­காக நடை­பெற்றது, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்கள் இறந்துவிட்டால் இடைத்தேர்­தல் வரும். இல்­லை­யென்­றால் அதை­ விட உயர்ந்த வேறொரு பொறுப்­புக்கு அவர் தேர்ந்தெடுக்­கப்­பட்­டால் அவர் ராஜி­னாமா செய்­யும் நிலை­யில் அங்கு இடைத்­தேர்­தல் வரும். ஆனால் தற்­பொ­ழுது இடைத்­தேர்தல் நடை­பெ­றும் 2 தொகுதி­க­ளி­லும் அவ்­வாறு நடக்க­வில்லை.

முப்­பெ­ரும் விழா­வில் கழ­கத் தலை­வர் குறிப்­பிட்டதை போல ஜனநா­ய­கம் சாக­டிக்­கப்­பட்டுவிட்­ட­தால் இந்த 2 தொகு­தி­க­ளி­லும் இடைத்தேர்­தல் நடை­பெ­றுகி­றது.

இதனை நமது வழக்­க­றிஞர்­கள் மக்­கள் மத்­தி­யில் தெளி­வாக எடுத்­துச்சொல்ல வேண்­டும். இந்­தத் தேர்­தல் என்­பது எவ்­வ­ளவு முக்­கி­யமா­னது. கடந்தகால தேர்­தலுக்­கும், தற்­போது நடைபெ­றுகிற இடைத்தேர்­த­லுக்கும் என்ன வித்தியா­சம் என்­பதை மக்­களுக்கு எடுத்து கூற வேண்­டும்.

இடைத்­தேர்­தல் நடைபெ­று­கின்ற இந்த 2 தொகு­தி­க­ளுமே தி.மு.­க.­விற்கு சாத­க­மான தொகு­தி­கள் தான் தற்­பொ­ழுது நடைபெ­று­கின்ற ஆட்சி தேர்­தலுக்கு முன்­னர் கொடுத்த வாக்­கு­று­தி­க­ளை­யெல்­லாம் இது­வரை நிறை­வேற்­றா­மல் ஓட்டு போட்ட நம்­மை­யெல்லாம் ஏமாற்றிவிட்­டார்­கள் என்று வாக்­கா­ளர்­கள் கொந்­த­ளித்து வரு­கி­றார்கள். தி.மு.க. ஆட்­சி­யின்போது பெற்ற நன்­மை­களை தவிர, புதி­தாக வந்த த.வெ.க. ஆட்சி எந்­தத் திட்­டத்­தையும் புதி­தாக கொண்டு வரவில்லை என்­பதை மக்­கள் புரிந்து வைத்­தி­ருக்­கி­றார்கள், இவை­யெல்­லாம் நமக்கு சாத­க­மாக நிச்சயம் அமை­யும்.

இந்த 2 தொகுதி இடைத்­தேர்­த­லில் நாம் வெற்றி பெற்­றால் நிச்­சயம் தமிழ்­ நாட்­டில் ஜன­வரி மாதத்­திற்குள் ஆட்சி மாற்றம் ஏற்­படும். எனவே இந்த வர­லாற்று வெற்றி கிடைக்க நாம் இடை­வி­டாது பணியாற்ற வேண்­டும்.

இவ்­வாறு அவர் பேசினார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel