தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

ஜெம் வீரமணி வழக்கை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார் முதலமைச்சர் விஜய்: இ.பி.எஸ். விமர்சனம்

ஜெம் கிரானைட் தொழில் அதிபர் வீரமணி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், வழக்கை மூடி மறைக்க தி.மு.க. முயற்சி செய்ததாக த.வெ.க. அமைச்சர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

நேற்று மதுராந்தகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் விஜய், மரகதம் குமரவேலை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது வீரமணியை கைது செய்தது தொடர்பாக பேசினார்.

சினிமாவில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார் என்றால், நிஜ வாழ்க்கையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது இன்று அம்பலமாகிவிட்டது. த.வெ.க. ஆட்சி அமைத்த பிறகு சுமார் 250 கொலைகள் நடந்திருக்கு.

முதலமைச்சர் விஜய், சிறுமிகளை சீரழித்தவர்களுக்கு இதுவரை என்ன தண்டனை பெற்று தந்தார்?.

எடப்பாடி பழனிசாமி தவெக வேட்பாளரை விலைக்கு வாங்கிவிட்டதாக ஆதவ் அர்ஜூனா தவறான செய்தியை பரப்பி வருகிறார்.

தன்னுடைய உத்தரவின் பேரில்தான் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டார் என்று மதுராந்தகம் இடைத்தேர்தல் பொதுக்கூட்ட பிரசாரத்தில் முதலமைச்சர் விஜய் பேசினார். அவருடைய கருத்து தவறானது என்று பல்வேறு சமூக வலைத்தளங்கள் வழியாகவும், செய்தி வழியாகவும் வெளிவந்துள்ளன.

தி.மு.க. ஆட்சியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையின்போது போதிய ஆதாரம் இல்லை என்று கூறியபோது நீதிபதிகள் அதை ஏற்கவில்லை. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதலமைச்சர் விஜய் கையில்தான் போலீஸ் மற்றும் உள்துறை உள்ளது.

இந்த நிலையில் கடந்த 19-6-2026-ல் வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. அப்போது இது தொடர்பாக 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கின்றார் நீதிபதி. அதன்பின் ஆகஸ்ட் மாதம் 3-ந்தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போதும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. மீண்டும் வாய்தா கேட்டு இருக்கின்றார்கள்.

27-ந்தேதி வழக்கு நீதிமன்றத்திற்கு வருகின்றபோது, போலீஸ் தரப்பு வழக்கறிஞர் தடவியல் துறை அறிக்கை நிலுவையில் உள்ளது என்று குறிப்பிடுகிறார். ஆனால், பலமுறை வாய்தா கொடுக்கப்பட்டு விட்டது. தொடர்ந்து வாய்தா கேட்டு இந்த வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறீர்கள். உடனே, வீரமணியை கைது செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிடுகின்றார்.

அந்த அடிப்படையில்தான் இந்த அரசாங்கம் கைது செய்கிறது. முதலமைச்சரின் உத்தரவின் பேரில் கைது செய்யப்படவில்லை. நீதிமன்றம் உத்தரவின்பேரில்தான் கைது செய்யப்படுகிறார். இதைத்தான் பெ. சண்முகம் குறிப்பிட்டார். அரசு முயற்சியில் அவர் கைது செய்யப்படவில்லை. நீதிமன்றம் அளித்த உத்தரவின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலை சொல்லியிருக்கிறார்.

நேற்று அரசியல் ஆதாயம் தேடுவதற்காக முதலமைச்சர் விஜய் இந்த கருத்தை சொன்னது அப்பட்டமான பொய். சினிமாவில்தான் நடித்துக் கொண்டிருந்தார் என்றால், நிஜ வாழ்க்கையில் நடித்துக் கொண்டிருப்பது அம்பலமாகிவிட்டது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel