தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

மதுபான கடைக்குள் சரக்கடித்து மட்டையான குரங்கு: வைரல் வீடியோ

மத்திய பிரதேச மாநிலம் ராஞ்சியில் உள்ள ஆர்மஞ்சி சவுக்கில் மதுபானக்கடை ஒன்று இயங்கி வருகிறது. பகல் நேரத்தில் ஊழியர்கள் பிசியாக வேலைப்பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு குரங்கு திடீரென கடைக்குள் புகுந்துள்ளது. அதோடு கடையில் இருந்து vodka சரக்கு பாட்டியை உடைத்து மடக்மடக் என குடித்துள்ளது.

பாதி பாட்டில் சரக்கை குடித்த நிலையில் தலை சுற்றுவதுபோல் வந்ததால், பாட்டிலை வைத்துவிட்டு அட்டை பெட்டியில் சரிந்துவிட்டது. திருடனாக இருந்தால் கடை ஊழியர்கள் அடித்து உதைத்திருப்பார்கள். அல்லது போலீசாரை அழைத்து ஒப்படைத்திருப்பார்கள். குரங்கு என்பதால், என்ன செய்வது என்று விட்டு விட்டனர்.

குரங்கு போதையில் தூங்கிக் கொண்டிருக்க மது பிரியர்கள் வீடியோ எடுத்தவாறு மதுபானங்களை வாங்கி செல்ல, கடை ஊழியர்கள் விற்பனையை தொடர்ந்தனர்.

குறிச்சொற்கள்: MADYA PRADESH MONKEY மதுபானம்
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel