ஆசிய விளையாட்டு - வெண்கலத்தை வெல்ல போவது யார்? - முதல் இன்னிங்சில் 165 ரன்களை குவித்த இலங்கை
ஜப்பானில் உள்ள கோரோகி விளையாட்டு மைதானத்தில் இன்று அதிகாலை வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் வெண்கல பதக்கத்திற்கான ஆசிய விளையாட்டு டி-20 கிரிக்கெட் போட்டி தொடங்கியது.
இதையடுத்து டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சகான் அராச்சிகே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து, மகளமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய வீரர்களும் அணியின் ஸ்கோரை உயர்த்த முடியாமல் திணறினர்.
இறுதியாக களமிறங்கிய இலங்கை அணி வீரரான ரத்நாயகே 32 பந்துகளில் 65 ரன்கள் குவித்து இலங்கை அணியை சரிவில் இருந்து மீட்டு, அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதையடுத்து 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை குவித்தது.
வங்கதேச அணி சார்பில் முஸ்தஃபிசுர் ரஹ்மான், மெகதி ஹசன் மற்றும் சைஃப் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அலிஸ் அல் இஸ்லாம் மற்றும் ரிஷாத் ஹூசைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel