ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்- சத்யபாமா
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இதனிடையே, மதுக்கம்பாளையம் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா பதிவு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சத்யபாமாவிடம், தேர்தல் செலவு தொடர்பாக சத்யபாமா பேசியது போன்று வெளியான வீடியோ விவகாரம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு சத்யபாமா, நான் பேசியதாக வலைத்தளங்களில் வெளியான வீடியோ சித்தரிக்கப்பட்டது. தற்போது வெளியான வீடியோவால் இடைத்தேர்தலில் எந்த தாக்கமும் ஏற்படாது. வீடியோ வெளியிட்டவரை கண்டுபிடித்து விட்டோம். வெற்றி வாய்ப்பு இருப்பதால் தான் இந்த மாதிரியான பிரச்சனை. ஆரம்பத்தில் இருந்து எல்லாம் சித்தரிக்கப்பட்டவை. மக்கள் தெளிவாக உள்ளனர். ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார்.
கடந்த தேர்தலில் ரூ.31 கோடி செலவழித்ததாக சத்யபாமா பேசியது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel