தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

போராடிய செவிலியர்களை கைது செய்வதா? ஒரு மாதத்தில் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்!- அன்புமணி

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை எழும்பூரில் ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாநிலை போராட்டம் நடத்திய தமிழ்நாடு இடைநிலை சுகாதார பணியாளர்கள் மீது காவல்துறையினர் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு, கைது செய்திருக்கின்றனர். உரிமைகளுக்காக அறவழியில் போராடிய செவிலியர்களை காவல்துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

இடைநிலை சுகாதார பணியாளர்களான செவிலியர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் தான் வழங்கப்படுகிறது. பணி நிலைப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக அவர்கள் பணியாற்றி வரும் போதிலும் அவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை.

ஆட்சிக்கு வந்தால் அனைத்து துறைகளிலும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்குவோம் என்று தவெக வாக்குறுதி அளித்திருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி தான் செவிலியர்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது நீதியல்ல.

செவிலியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் உறுதியளித்ததைத் தொடர்ந்து நவம்பர் 3-ஆம் தேதி வரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக செவிலியர்கள் அறிவித்துள்ளனர். அதற்குள்ளாக அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்; அவர்கள் மீண்டும் ஒருமுறை போராட்டம் நடத்தும் நிலையை அரசு ஏற்படுத்திவிடக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel