சிறப்புச் செய்தி

வண்டலூரில் நிறைவு விழா: பயிற்சி முடித்த டிஎஸ்பிக்களுக்கு பதக்கம் வழங்கிய முதலமைச்சர் விஜய்

10 hours ago 17 பார்வைகள்
வண்டலூரில் நிறைவு விழா: பயிற்சி முடித்த டிஎஸ்பிக்களுக்கு பதக்கம் வழங்கிய முதலமைச்சர் விஜய்

சென்னை ஊனமாஞ்சேரியில் காவல் துணைக் கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு விழா நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில், முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை சார்பில் காவல் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

அப்போது, காவல் துணை விழாவில் வாகன அணிவகுப்பில் வந்த முதலமைச்சர் விஜயை அமைச்சர்கள், சபாநாயகர் ஆகியோர் வரவேற்றனர்.

பதிலுக்கு முதலமைச்சர் விஜய் வணக்கம் தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் இறங்கும் முன் ஓட்டுநருக்கு கை கொடுத்து நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து, பயிற்சி நிறைவு விழாவில் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார். அப்போது, போலீசாரின் அணிவகுப்பை விஜய் கண்டு ரசித்தார்.

2025-ம் ஆண்டு பேட்ச் அதிகாரிகளான 25 டிஎஸ்பிக்கள், பயிற்சி முடிந்து தமிழக காவல் துறையில் இணைகின்றனர்.

பியற்சியில் சிறப்பாக செயல்பட்ட டிஎஸ்பிகளுக்கு முதலமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்கினார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்