வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய இந்தியா 14.4 ஓவரில் வெற்றிக்கான இலக்கை எட்டியது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 43 பந்தில் 102 ரன் குவித்து அசத்தினார்.
இந்நிலையில், இந்த சதத்துடன் டி20 தரவரிசையில் 18 இடங்கள் முன்னேறிய ஷ்ரேயஸ் அய்யர், தரவரிசைப் பட்டியலில் 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதுதான் அவரது அதிகபட்ச டி20 தரவரிசை என்பது குறிப்பிடத்தக்கது.
இஷான் கிஷன் முதலிடத்திலும், அபிஷேக் சர்மா 2வது இடத்திலும், ஷ்ரேயஸ் அய்யர் 7வது இடத்திலும், திலக் வர்மா 10வது இடத்திலும் உள்ளனர்.
ஒருநாள் தரவரிசையில் இந்திய கேப்டன் சுப்மன் கில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 8 இடம் முன்னேறி 46-வது இடம் பிடித்துள்ளார்.